spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை மெட்ரோ ரயிலில் 85.89 லட்சம் பேர் பயணம்!

சென்னை மெட்ரோ ரயிலில் 85.89 லட்சம் பேர் பயணம்!

-

- Advertisement -

 

பிளே ஆஃப் போட்டி- பயணச்சீட்டு கட்டாயம்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!
File Photo

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அந்த வகையில், 2023- ஆம் ஆண்டு ஜூலை மாதத்தை விட ஆகஸ்டு மாதத்தில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 215 பயணிகள் மெட்ரோ ரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில், இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

ஜெயம் ரவி, நயன்தாரா காம்போவின் ‘இறைவன்’….. முக்கிய அறிவிப்பு!

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 85,89,977 ஆக உள்ளது. இதில் அதிகபட்சமாக ஆகஸ்ட் 11- ஆம் தேதி அன்று 3,29,920 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கி வரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துள்ளது.

MUST READ