Homeசெய்திகள்இந்தியாடேராடூனில் லாரி மீது அதிவேகமாக மோதிய இன்னோவா கார்... 3 பெண்கள் உட்பட 6 மாணவர்கள்...

டேராடூனில் லாரி மீது அதிவேகமாக மோதிய இன்னோவா கார்… 3 பெண்கள் உட்பட 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!

-

- Advertisement -
kadalkanni

உத்தரகாண்ட் மாநிலம் டேரடூனில் அதிவேகத்தில் சென்ற கார் ஒன்று, லாரியின் பின்னால் மோதி விபத்திற்குள்ளானதில் காரில் பயணம் செய்த 3 பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த 12ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணி அளவில், ஒ.என்.ஜி.சி சௌக் பகுதியில் இன்னோவா கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற அந்த கார், கண்டெய்னர் லாரியின் மீது அதிவேகமாக மோதி வித்திற்குள்ளானது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியதில் காரில் பயணம் செய்த 3 பெண்கள் உள்ளிட்ட 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் காரின் மேற்கூரை பெயர்ந்ததில் 2 பேரின் தலைகள் துண்டிக்கப்பட்டன.

உயிரிழந்தவர்கள் டேராடூனை சேர்ந்த மாணவர்கள் குணீத் சிங் (19), காமக்ஷி சிங்கால் (20), நவ்யா கோயல் (23), ரிஷப் ஜெயின் (24), அதுல் அகர்வால் (24), மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலம் சம்பாவைச் சேர்ந்த குணால் குக்ரேஜா (23) ஆகியோர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 25 வயதான சித்தேஷ் அகர்வால் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

போலீசாரின் விசாரணையில் விபத்தில் காயம் அடைந்த மாணவர் சித்தேஷ் அகர்வால், தான் புதிதாக கார் வாங்கியதற்காக நண்பர்களுக்கு விருந்து அளித்துள்ளார். விருந்து முடிந்து அனைவரும் புதிய காரில் திரும்பி கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் விபத்து தொடர்பாக டேராடுன் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

MUST READ