மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியிலும், ஈரானின் சிறப்பு அனுமதியுடன் மேலும் இரண்டு இந்திய எல்பிஜி (LPG) காஸ் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) கடந்து இந்தியா நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளன.
BW ELM மற்றும் BW TYR ஆகிய இரண்டு மிகப்பெரிய எல்பிஜி காஸ் கப்பல்கள் தற்போது ஹார்முஸ் நீரிணையை கடந்து இந்திய கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே Jag Vasant, Nanda Devi மற்றும் Shivalik ஆகிய மூன்று எல்பிஜி கப்பல்கள் பாதுகாப்பாக இந்திய துறைமுகங்களை வந்தடைந்த நிலையில், தற்போது இந்த அடுத்தக்கட்ட நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் எரிசக்தி தேவையை கருத்தில் கொண்டு, ஈரானிய அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட ராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் பலனாக இந்த கப்பல்களுக்கு பாதுகாப்பான வழித்தடம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றங்களால் ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்தியக் கப்பல்களுக்கு மட்டும் ஈரான் முன்னுரிமை அளித்து அனுமதி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்தியாவை நோக்கி வரும் இந்த இரண்டு கப்பல்களும் இன்னும் சில நாட்களில் குறிப்பிட்ட இந்திய துறைமுகங்களை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘தேங்க்யூ இந்தியா’: ஏவுகணைகளில் நன்றி தெரிவித்து இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்!
