மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா தலைமையிலான சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்ற வருகின்றது. தற்போது மகாராஷ்டிரா பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்புகளுக்கு மும் மொழி கொள்கையின் அடிப்படையில் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கையின் படி வெளியாகியுள்ள இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்பலைகள் எழுந்துள்ளது.முக்கிய எதிர்க்கட்சியான சிவசேனா (உத்தவ்) செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறுகையில், ‘அரசு அலுவல் மொழியாக மராத்தி இருக்கையில் ஹிந்தி பயில்வது அவசியமில்லை. முதலில் தாய் மொழியான மராத்தியை பயிற்று மொழியாக்குங்கள். பணி, தொழில் மற்றும் வியாபாரங்களில் முதலில் மராத்திக்கு சிறப்பு கிடைக்க வேண்டும் ஹிந்தி மொழியின் பாலிவுட் பட உலகம் இங்குதான் உள்ளது. ஹிந்தி மொழியின் தாக்கம் இங்கு ஏற்கனவே உள்ளது.
இதன் பிறகுமா எங்களுக்கு ஹிந்தி “கற்பிக்கிறீர்கள்”,? தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, வடகிழக்கு என தேவைப்படும் மாநிலங்களில் ஹிந்தியை கட்டாயமாக்குங்கள். மகாராஷ்டிராவில் தாய் மொழி மராத்திதான் முதல் தேவை. ஹிந்தி மீதான காதல் நாடு முழுவதிலும் உள்ளது அதை பள்ளி பாடங்களில் திணிக்க வேண்டியது இல்லை என்கிறாா்.
இதுகுறித்து துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில், ‘நமது தாய்மொழியான மராத்திக்குதான் முதல் முன்னுரிமை. வேறு எதுவும் செய்ய முடியவில்லை என்பதால் சிலர் ஹிந்தியை பிரச்னையாக்குகிறார்கள். நாட்டில் ஆங்கிலம் பரவலாக உள்ளது போல ஹிந்தியும் பயன்பாட்டில் இருக்கட்டும்’ என கூறியுள்ளாா்.
டெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர்