Homeசெய்திகள்இந்தியாடெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர்

டெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர்

-

- Advertisement -

டெல்லியில் முஸ்தபாபாத்தில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர்
டெல்லியில் முஸ்தாபாபாத் பகுதியில் 4 தளங்களை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடைபெறுவருகிறது. இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனா். இடிபாடுகளில் சிக்கிய 14 தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், 8 பேரை மீட்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், இதுபற்றி வடகிழக்கு மாவட்ட கூடுதல் டி.சி.பி. சந்தீப் லம்பா அவா்கள் தொடர்ந்து மீட்பு பணி நடை பெற்று வருகிறது என்று கூறியுள்ளாா். 8 முதல் 10 பேர் வரை இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். தேசிய பேரிடர் பொறுப்பு படை மற்றும் டெல்லி போலீசார் அடங்கிய குழுவினர் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர்.  டெல்லி தீயணைப்பு துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

பூஜ்ஜியம் சதவீத கஞ்சா பயிரிடும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

MUST READ