Homeசெய்திகள்இந்தியாமனிதர்களுக்கு பாதுகாப்பானது என்பதை உறுதிச் செய்திருப்பதாக இஸ்ரோ அறிவிப்பு!

மனிதர்களுக்கு பாதுகாப்பானது என்பதை உறுதிச் செய்திருப்பதாக இஸ்ரோ அறிவிப்பு!

-

 

மனிதர்களுக்கு பாதுகாப்பானது என்பதை உறுதிச் செய்திருப்பதாக இஸ்ரோ அறிவிப்பு!

மனிதர்களை விண்ணும் அனுப்பும் இந்தியாவின் முயற்சி அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. இது குறித்த ஒரு தொகுப்பைத் தற்போது பார்ப்போம்!

தனுஷ் நடிக்கும் ராயன்… மிரட்டலான லுக்கில் எஸ்.ஜே.சூர்யா…

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் விண்வெளி திட்டமான ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்படவுள்ள கிரையோஜெனிக் இன்ஜின், மனிதர்களுக்கு பாதுகாப்பானது என உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தனது எக்ஸ் வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளது.

CE20 இன்ஜின் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அதில் அந்த இன்ஜின் தனது ஆற்றலைக் காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் ஏழு கட்டங்களாக சோதனை நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு உகந்தது என்பதை உறுதிச் செய்யும் வகையில், நான்கும் இன்ஜின்கள் பல்வேறு தட்பவெப்ப சூழலில் 39 முறை சோதனை செய்யப்பட்டது.

விஜய் ஆண்டனியின் ரோமியோ… முதல் பாடல் ரிலீஸ்…

இன்ஜின்கள் குறைந்தபட்சம் 6,350 வினாடிகள் தொடர்ந்து செயல்பட்டு பரிசோதிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், CE20 இன்ஜின் மொத்தம் 8,810 வினாடிகளுக்கு பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, ககன்யான் திட்டத்தின் முதற்கட்டமாக ஆளில்லாத விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்திற்கான இன்ஜினையும் இஸ்ரோ வெற்றிகரமாக சோதித்துள்ளது.

MUST READ