Homeசெய்திகள்இந்தியாஜூலை 11- ஆம் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!

ஜூலை 11- ஆம் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!

-

 

ஜூலை 11- ஆம் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!
Photo: Minister Nirmala Sitharaman

வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று காலை 11.00 மணிக்கு டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 50- வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள், மத்திய நிதியமைச்சகத்தின் அதிகாரிகள் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

ஆந்திராவில் சரக்கு ரயில் தடம்புரண்டது

இந்த கூட்டத்தில், சிமெண்ட் மீதான ஜி.எஸ்.டி., ஆன்லைன் விளையாட்டுகள் மீதான ஜி.எஸ்.டி.யை அதிகரிப்பது பன்னோக்கு பயன்பாட்டிற்கான வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி.யை மறு ஆய்வு செய்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டி.யைக் குறைப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. ஜி.எஸ்.டி. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்திக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோதனையை அதிகரித்த அமலாக்கத்துறை….. முடக்கப்படும் சொத்துகள் என்னவாகும்?

வரும் 2024- ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்களைக் கவரும் வகையில், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு குறைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ