
கேரளாவில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி ஆசிரமம் மைதானத்தில் இருந்து மீட்கப்பட்டார்.
கங்குவா படத்தில் சூர்யாவின் காட்சிகள் நிறைவு… அடுத்து ஆந்திரா செல்லும் படக்குழு..
கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி நேற்று (நவ.27) மாலை 05.00 மணியளவில் தனது 8 வயது சகோதரருடன் டியூசனுக்கு நடந்துச் சென்றுள்ளார். அப்போது, அவ்வழியே காரில் வந்த மர்மநபர்கள் சிறுமியைக் கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒய்யூரில் நடந்துள்ளது. அதைத் தொடர்ந்து, சிறுமியின் தாயாரை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசிய நபர் ரூபாய் 5 லட்சம் கொடுத்தால் சிறுமி பத்திரமாக வீடு திரும்புவார் எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து, மாநிலம் முழுவதும் சிறுமியைத் தேடுவதற்கான பணிகளை முடுக்கிவிட்டனர். அத்துடன், சிறுமியைக் கடத்தியதாக திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 3 பேரைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில், 6 வயது சிறுமியை ஆசிரமம் மைதானத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டார்.
விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் படப்பிடிப்பு நிறைவு
எனினும், சிறுமியைக் கடத்திய கும்பலைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.