spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகேரள குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழப்பு 3 ஆக அதிகரிப்பு!

கேரள குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழப்பு 3 ஆக அதிகரிப்பு!

-

- Advertisement -

 

கேரள குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழப்பு 3 ஆக அதிகரிப்பு!
File photo

கேரள குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று ஆக உயர்ந்துள்ளது.

we-r-hiring

ஆந்திராவில் ரயில் விபத்து- 6 பேர் உயிரிழப்பு!

கேரள மாநிலம், கொச்சி அருகே களமச்சேரியில் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் நேற்று (அக்.29) நடைபெற்ற கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று ஆக அதிகரித்துள்ளது.

சம்பவம் நிகழ்ந்த போதே ஒரு பெண் உயிரிழந்துள்ள நிலையில், மாலையில் சிகிச்சைப் பலனின்றி ஒரு பெண் உயிரிழந்தார். இந்த நிலையில், படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வந்த 12 வயது சிறுமி இன்று (அக்.30) காலை உயிரிழந்தார்.

படுகாயமடைந்த 30- க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர். களமச்சேரி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, கேரள மாநில காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

“குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்கப்படும்”- கேரள காவல்துறை டி.ஜி.பி. பேட்டி!

களமச்சேரியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முகாமிட்டுள்ள நிலையில், பயங்கரவாதத் தடுப்புப் படைப் பிரிவு அதிகாரிகளும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முன்னதாக வெடி குண்டுகளை வெடிக்கச் செய்தது தாம் தான் எனக் கூறி, டொமினிக் மார்ட்டின் என்பவர் சரணடைந்தார்.

அவரிடம் விசாரணையை நடத்திய காவல்துறையினர், அவர் தான் குற்றவாளி என உறுதிச் செய்தனர்.

MUST READ