spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகேரளாவில் பரவும் நிபா- தமிழக எல்லைகளில் கண்காணிப்புத் தீவிரம்!

கேரளாவில் பரவும் நிபா- தமிழக எல்லைகளில் கண்காணிப்புத் தீவிரம்!

-

- Advertisement -

 

கேரளாவில் பரவும் நிபா- தமிழக எல்லைகளில் கண்காணிப்புத் தீவிரம்!
File Photo

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

கேரளாவில் நிபா வைரசுக்கு 2 பேர் உயிரிழப்பு!

நிபா வைரஸ் பாதிப்பால் இரண்டு பேர் உயிரிழந்ததால், எல்லையோர மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர் தேனி, தென்காசி, கன்னியாகுமரியில் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் முழு விவரங்களைத் திரட்டவும், தகவல் தெரிவிக்கவும் சுகாதாரப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் அனைவருக்கும் காய்ச்சல் மற்றும் நிபா வைரஸ் அறிகுறி தொடர்பாக, முழு ஆய்வு நடத்திய பிறகே தமிழக எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும் என சுகாதாரப் பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

“நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்”- முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்!

இது தொடர்பாக, தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் ஆணை பிறப்பித்துள்ளார்.

MUST READ