spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகேரளாவில் நிபா வைரசுக்கு 2 பேர் உயிரிழப்பு!

கேரளாவில் நிபா வைரசுக்கு 2 பேர் உயிரிழப்பு!

-

- Advertisement -

 

கேரளாவில் நிபா வைரசுக்கு 2 பேர் உயிரிழப்பு!
File Photo

கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக, இரண்டு பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இதையடுத்து, கேரளாவுக்கு மத்திய குழு அனுப்பப்படவுள்ளது.

we-r-hiring

கே ஜி எஃப் யாஷின் 19 வது படத்தை இயக்கும் மலையாள பெண் இயக்குனர்!

கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30- ஆம் தேதி 40 வயது நபர் ஒருவர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த நான்கு பேர் சந்தேகத்தின் பேரில், தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் ஒரு நபரும் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் உயிரிழந்தார். இவர்கள் அனைவரது ரத்த மாதிரிகளும் ஏற்கனவே புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த இருவருக்கும் நிபா வைரஸ் தாக்குதல் இருந்தது உறுதிச் செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

‘இசை நிகழ்ச்சி ஏற்பட்ட குளறுபடிகளுக்கு அவர் பொறுப்பேற்க முடியாது’….. ஏ ஆர் ரகுமானுக்கு குவியும் ஆதரவு!

கடந்த 2012- ஆம் ஆண்டு கேரளாவில் முதன் முதலாக நிபா வைரஸ் பரவிய போது, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, கேரளா மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. கோழிக்கோட்டில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு, மாதிரி சேகரிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை உள்ளிட்டவற்றைக் கவனிக்க 16 சிறப்புக் குழுக்களை கேரளா அரசு அமைத்திருக்கிறது.

‘குஷி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, கேரளா அரசுக்கு உதவிச் செய்யவும், நிலைமையை ஆராயவும், குழு ஒன்று அனுப்பப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

MUST READ