Homeசெய்திகள்இந்தியாஆந்திராவில் போர் மற்றும் ராணுவ விமானங்களை தரையிறக்கி ஒத்திகை

ஆந்திராவில் போர் மற்றும் ராணுவ விமானங்களை தரையிறக்கி ஒத்திகை

-

- Advertisement -

ஆந்திராவில் தேசிய நெடுஞ்சாலையில் அவசர அவசரமாக தரையிறங்கிய போர் விமானங்கள்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அவசர அவசரமாக ராணுவ விமாங்கள் தரையிறக்கபட்டது.

we-r-hiring

நாடு முழுவதும் அவசர காலங்களில் போர் மற்றும் ராணுவ விமானங்களை தேசிய நெடுஞ்சாலைகளில் தரையிறக்குவது போன்ற ஒத்திகைகளை இந்திய விமானபடை மேற்கொள்கிறது.

அந்தவகையில் ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தின் பிச்சுகலகுடிபாடு என்ற கிராமத்தின் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை 16ல் அவசர தரையிறக்கம் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒத்திகையின் போது 2 போர் விமானங்கள் மற்றும் 3 ராணுவ விமானங்களை தரையிறக்கி ஒத்திக்கை பார்க்கபட்டது.

வரும் காலங்களில் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சிங்கராயகொண்டா – கலிகிவாய் இடையே 4.1 கிமீ தூரம் தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் தரையிறக்கும் வகையில் சாலை அமைக்கபடவுள்ளதாக குரூப் கேப்டன் ஆர்.எஸ் செளத்ரி தெரிவித்துள்ளார்.

MUST READ