மகாராஷ்டிராவில் பேருந்து கவிழ்ந்து 13 பேர் உயிரிழப்பு
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
புனேவின் பிம்பிள் குரவ் என்ற இடத்தில் இருந்து கோரேகானுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, ராய்காட்டின் கோபோலி என்ற இடத்தில்
அதிகாலை 4:30 மணியளவில் விபத்துக்குள்ளானது. பேருந்தில் 41 பயணிகள் இருந்த நிலையில், நிகழ்விடத்திலேயே 7 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றபோது அங்கு 6 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்த மீட்புப்படையினர், முழுவீச்சில் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கோரேகான் பகுதியைச் சேர்ந்த ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் ஒரு நிகழ்ச்சிக்காக புனே சென்றுவிட்டு திரும்பும்போது விபத்தில் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.