spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"பதவி விலகப் போவதில்லை"- மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் திட்டவட்டம்!

“பதவி விலகப் போவதில்லை”- மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் திட்டவட்டம்!

-

- Advertisement -

 

"பதவி விலகப் போவதில்லை"- மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் திட்டவட்டம்!
Photo: ANI

மணிப்பூர் மாநிலத்தில் சுமார் 50 நாட்களுக்கு மேலாக கலவரம் நீட்டித்து வருவதால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கலவரத்தால் 100- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

we-r-hiring

போர்க்களத்தில் ஒற்றை சிங்கமாய் தனுஷ்…. அனல் பறக்கும் ‘கேப்டன் மில்லர்’ ஃபர்ஸ்ட் லுக்!

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடைகளை மாநில அரசு வழங்கியுள்ளது. இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன், இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற ராகுல் காந்தி, அம்மாநில ஆளுநரை நேரில் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், மணிப்பூரில் நீட்டிக்கும் கலவரத்திற்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறு அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங்-கை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், அவர் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஹைப்பர் லிங்க் கிரைம் த்ரில்லரில் இணைந்த விதார்த், சந்தோஷ் பிரதாப் கூட்டணி!

இந்நிலையில், மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நெருக்கடியான சூழலில் நான் பதவி விலகப் போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ