
மணிப்பூரில் வன்முறையைக் கட்டுப்படுத்தும் பணியில் மத்திய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டும், அங்கு அமைதியின்மைத் தொடர்கிறது.

பாஜகவுக்கு சமாதி கட்ட அண்ணாமலை ஒருவர் போதும் – நாராயணசாமி பேட்டி
இதற்கிடையே, மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், ராணுவத்தினர் அங்கு கொடி அணி வகுப்பில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மெய்தியினத்தவர், பழங்குடியின அந்தஸ்து கோருவதால், அவர்களுக்கும், குகி மற்றும் நாகா பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதம் மோதல் ஏற்பட்டது.
இதில் 70- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கடும் கட்டுப்பாடுகளால் மெல்ல அமைதி திரும்பி வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 16) இரவு மீண்டும் பெரிய அளவில் கலவரம் மூண்டது. பல இடங்களில் கலவரக்காரர்கள் ஒன்றுக் கூடி, தீ வைக்கும் சம்பவங்களிலும் ஈடுபட்டனர்.
அவர்களை அதிரடி படையினர் விரட்டியடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் கலைத்தனர். அதைத் தொடர்ந்து, கொடி அணி வகுப்பையும் நடத்தினர். காவல் நிலையம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி, அங்குள்ள ஆயுதக் கிடங்கில் இருந்து துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல கும்பல் முயற்சிதது. அவர்களையும் அதிரடிப் படையினர் விரட்டியடித்தனர்.
பார்சல் உணவில் பிளேடு துண்டு….உணவகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது உணவுப் பாதுகாப்புத் துறை!
தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளை வாங்கிக் கொள்வதற்காக இம்பால் கிழக்கு மாவட்டத்தில் இன்று (ஜூன் 18) ஊரடங்கு கூடுதலாகத் தளர்த்தப்பட்டுள்ளது. அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசியல் வாதிகளின் வீடுகள், அடையாளம் தெரியாத கும்பல்களால் தீ வைக்கும் நிகழ்வுகளும், நடந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, மணிப்பூர் வன்முறைக் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, கவலைத் தெரிவித்திருக்க வேண்டும் என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதேபோல், பிரதமர் நரேந்திர மோடி வாய்த்திறந்துப் பேசாதது ஏன்? என்று மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.


