spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாராகுல்காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மனு பாக்கர்

ராகுல்காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மனு பாக்கர்

-

- Advertisement -

பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற மனு பாக்கர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை 2 வெண்கலப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். மற்றொரு பிரிவு போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார். இதன் காரணமாக அவர் வரும் 11ஆம் தேதி நடைபெறும் ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்திச்செல்லும் பெருமையை பெற்றுள்ளார்.

we-r-hiring

இந்த நிலையில், போட்டியில் பங்கேற்ற பின்னர் நாடு திரும்பிய மனு பாக்கர் நேற்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவரான சோனியா காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதன் தொடர்ச்சியாக, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை, தனது பயிற்சியாளர் ஜஸ்பால்ராணா மற்றும் பெற்றோருடன் நேரில் சந்தித்தார்.

அப்போது, மனு பாக்கரை மலர்கொத்து வழங்கி வரவேற்ற ராகுல்காந்தி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார். மேலும் மனு பாக்கர் குடும்பத்தினருடன் இணைந்து புகைப்படமும் எடுத்துகொண்டார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

MUST READ