spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமருத்துவ மாணவர்களுக்கான 'நெக்ஸ்ட் தேர்வு' ஒத்திவைப்பு!

மருத்துவ மாணவர்களுக்கான ‘நெக்ஸ்ட் தேர்வு’ ஒத்திவைப்பு!

-

- Advertisement -

 

மருத்துவ மாணவர்களுக்கான 'நெக்ஸ்ட் தேர்வு' ஒத்திவைப்பு!
File Photo

மருத்துவ மாணவர்களுக்கான ‘நெக்ஸ்ட் தேர்வு’ மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

we-r-hiring

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்வு

கடந்த 2019- ஆம் ஆண்டு பேட்ச் மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதேபோல், பல்வேறு மாநில முதலமைச்சர்களும் கடும் எதிர்ப்பை மத்திய அரசுக்கு பதிவுச் செய்திருந்தனர்.

அந்த வகையில், நெக்ஸ்ட் தேர்வைக் கைவிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதில், நெக்ஸ்ட் தேர்வுக் கிராமப்புற, சமூக ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றதாக அறிவிப்பு!

இந்த நிலையில், மருத்துவம் படித்து வரும் இறுதியாண்டு மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவெடுக்கும் வரை நெக்ஸ்ட் தேர்வு நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ