ஆந்திர மாநிலத்தில் கால்வாயில் மினி லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில 7 கூலித் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் டி.நரசாபுரம் மண்டலம் பொர்ரம்பாளையம் பகுதியில் முந்திரி ஏற்றிக்கொண்டு மினிலாரி ஒன்று, நிட்டவோலு மண்டலம் தாடிமல்லா நோக்கி சென்று கொண்டிருந்தது. ஏலுரு அருகே அரிபட்டிடிப்பாலு – சின்னைகுடம் சாலையில் சென்று கொண்டிருநதது. அப்போது, சாலை பள்ளத்தில் விழாமல் இருக்க ஓட்டுநர் மினி லாரியை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் மற்றும் மீட்புப் படையினர் காயம்அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.