Homeசெய்திகள்இந்தியாமூடா நில ஒதுக்கீடு வழக்கு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு 

மூடா நில ஒதுக்கீடு வழக்கு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு 

-

- Advertisement -

மூடா நில ஒதுக்கீடு விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது மைசூரு லோக் ஆயுக்தா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் எனப்படும் மூடா அமைப்பு முறைகேடாக சித்தராமையாவின் மனைவி பேரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால் தனது மனைவிக்கு இழப்பீடாக இந்த வீட்டு மனைகள் வழங்கப்பட்டதாக சித்தராமையா விளக்கம் அளித்தார். இதனிடையே, மூடா நில ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சித்தராமையாவை விசாரிக்க கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அண்மையில் அனுமதி வழங்கி இருந்தார்.

முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு....கர்நாடக மக்கள் மகிழ்ச்சி!
Photo: ANI

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சித்தராமையா ஆளுநரின் உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மூடா நில ஒதுக்கீடு விவகார வழக்கில் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 12ஆம் தேதியுடன் விசாரணை நிறைவடைந்தது.

இதனை அடுத்து, இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்றம், முதலமைச்சர் சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்ய கர்நாடக லோக் ஆயுக்தா போலீசாருக்கு உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பாக 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

"மத்திய பா.ஜ.க. அரசுடன் தி.மு.க. இணக்கமாக உள்ளது"- முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு!

இந்த நிலையில், மூடா நில ஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா மீது மைசூரு லோக் ஆயுக்தா  போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சித்தராமையா சேர்க்கப்பட்டு உள்ளார். 2வது குற்றவாளிகளாக அவரது மனைவி பார்வதி, மூன்றாவது குற்றவாளிகளாக பார்வதியின் சகோதரர் மல்லிகார்ஜுன சுவாமி மற்றும் நிலத்தை விற்ற தேவராஜ் நான்காவது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மைசூரு லோக் ஆயுக்தா காவல் கண்காணிப்பாளர் உதேஷ் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

MUST READ