காஷ்மீர் பகல்ஹாம் தாக்குதல் தொடர்பாக தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்கு சென்ற பயணிகள் விவரத்தைப் பெற்று போட்டோ வீடியோ ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு துவங்கியுள்ளது.கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பகல்ஹாம் பகுதியில் தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை தாக்கியதில் 26 பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது குறிப்பாக நேற்று அதிகாலை 21 தீவிரவாத முகாம்களை இந்தியா தரப்பில் தாக்குதல் நடத்தி அளிக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தப்பட்டு பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்
இந்த பகல்ஹாம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகைமை அமைப்பு, அதிகாரப்பூர்வமாக விசாரணையை கையில் எடுத்துள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட பயணிகள் மற்றும் சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களிடம் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை பெற்று தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் அடுத்த கட்டமாக விசாரணையை தீவிரப் படுத்துவதற்கு தாக்குதல் நடந்த நாட்கள் அன்றும் அதன் முன்பாகவும் சம்பவ இடத்திற்கு பயணித்த பயணிகளிடமிருந்து புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்கள் இருந்தால் சமர்ப்பிக்கும் படி தேசிய புலனாய்வு முகமை டெல்லி தலைமையகத்தில் இருந்து பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்காக 9654958816 என்ற தனியாக whatsapp நம்பரும் மேலும் தொடர்பு கொண்டு பேசுவதற்கு 011-34368800 என்ற தொலைபேசி எண்ணும் தெரிவித்துள்ளது. அவ்வாறு தொடர்பு கொண்டு பேசும் நபர்கள் எவ்வாறு தங்களிடம் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்புவது என்பது குறித்து அதிகாரிகள் உதவுவார்கள் என்று தேசிய புலனாய்வு முகமை அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களிலும் பல்வேறு வீடியோக்கள் கிடைக்கப்பெற்றாலும் இன்னும் விசாரணைக்கு பல தகவல்கள் தேவைப்படுகிற காரணத்தினால் பொதுமக்களிடம் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர். அந்த அடிப்படையில் தமிழகத்தில் இருந்து பயணித்த பயணிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களிடமிருந்து புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை பெறுவதற்கான நடவடிக்கையையும் சென்னை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த புகைப்பட வீடியோ ஆதாரங்கள் மூலமாக தாக்குதல் அன்றும் தாக்குதலுக்கு முந்தைய நாட்களும் வீடியோக்களில் சந்தேகப்படும்படியாக தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் சிக்குவது தொடர்பாகவும் அவர்கள் எவ்வாறு இந்தத் திட்டத்தை தீட்டி செயல்படுத்தினார்கள் என்பது குறித்தும் அறிய முடியும் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கையை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே சென்னை வழியாக இலங்கைக்கு சென்ற விமானத்தில் பகல்ஹாம் தாக்குதல் தொடர்பான சந்தேக நபர்கள் ஆறு பேர் பயணித்ததாக கூறப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட விமானத்தில் தீவிர விசாரணை என்பது இலங்கையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மசூத் அசார் தப்பிச்சிட்டாரா? நிச்சயமா போர் வெடிக்கும்! அய்யநாதன் உடைக்கும் உண்மை!