spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைமசூத் அசார் தப்பிச்சிட்டாரா? நிச்சயமா போர் வெடிக்கும்! அய்யநாதன் உடைக்கும் உண்மை!

மசூத் அசார் தப்பிச்சிட்டாரா? நிச்சயமா போர் வெடிக்கும்! அய்யநாதன் உடைக்கும் உண்மை!

-

- Advertisement -

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று  மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக  மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது மிகவும் கொடூரமானது. ஏன் இதற்காக பாகிஸ்தானில் உள்ள முகாம்களை நோக்கி இந்த நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் இருந்தது என்றால்? அங்கிருந்து பயிற்சி அளித்து, ஆயுதங்களை வழங்கிதான் அனுப்புகிறார்கள். எனவே பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய கட்டமைப்புகளை தகர்க்க வேண்டும் என்று நடவடிக்கை எடுத்துள்ளார்கள். ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பாதுகாப்புத் துறை செயலாளர் என்ன சொல்கிறார் என்றால்? போரை தூண்டுகிற வகையில் நாங்கள் இதை செய்யவில்லை. தீவிரவாத பயிற்சி முகாம்களை திட்டமிட்டு குறிவைத்து தாக்கி உள்ளோம். பொதுமக்கள் உயிரிழப்பு எவுதும் இல்லை என்று சொல்கிறார். நாங்கள் போருக்கு செல்லவில்லை என்றும் சொல்கிறார். ஏனென்றால் சர்வதேச அழுத்தம் போருக்கு எதிராகத்தான் உள்ளது.

ஆனால் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் என்ன சொல்கிறார் என்றால்? பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அதனால் தங்களுடைய பாதுகாப்பிற்காக தாக்குதல் நடத்த உரிமை உள்ளது என்றும், இந்தியாவின் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்க பாதுகாப்பு படைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாகிஸ்தானும் பதிலடி கொடுக்கப் போகிறது. அதனை எதிர்கொள்ள இந்தியாவும் தயார் நிலையில் தான் உள்ளது. அதனால் போராக வெடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. தற்போதே காஷ்மீர் எல்லைக்கட்டுபாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மவுலான மசூத் அசார், இந்தியாவுக்கு எதிரான பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக மும்பையில் நடைபெற்ற தாக்குதலுக்கு மிக முக்கியமான நபர் ஆவார். அந்த தாக்குலுக்கு பின்னர் இந்தியா அவரை குறிவைக்கிறது. ஆனால் பாகிஸ்தான் அரசு என்ன செய்கிறது என்றால் மசூத் அசாருக்கு வீடு கட்டிக்கொடுத்து, பயிற்சி முகாம்களை அமைத்துக் கொடுத்தது. சர்வதேச நாடுகள் எல்லாம் அந்த இயக்கத்தை தடை செய்தபோது, தனது இயக்கத்தை பெயரை ஜமாத்-உத்-தாவா என்று பெயரை மாற்றம் செய்து கொண்டு மத சேவைகளில் ஈடுபட போகிறேன் என்று சொன்னார். துபாகிஸ்தான் அவருக்கு அடைக்கலம் தருகிறது என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. இதனை நான் 25 வருடங்களாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். மசூத் அசார் தப்பிச்சென்றுவிட்டார். அவரது குடும்பத்தினர், உறவினர்கள்தான் தாக்குதலில் பலியாகி உள்ளனர்.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர் நடந்த 3 யுத்தங்களில், பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. இதனால் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இந்தியா ரத்தம் சிந்த வேண்டும் என்று பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். 1982க்கு பின்னர் அடக்குமுறைகள் காரணமாக எல்லைத்தாண்டி சென்று பயிற்சி பெற்று வந்து தாக்குதல் நடத்துகிறார்கள். கடைசியாக நடைபெற்ற பகல்காம் வரை இதுதான் அடிப்படையாகும். ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை என்பது அவசியமானதாகும். பஹல்காமில் நமது மக்கள் கொல்லப்பட்டார்கள். அதற்காக பயங்கரவாத முகாம்களை தாக்கினார்கள். அதற்கு பிறகு ஒரு முடிவுக்கு வர வேண்டும். அதனால் தான் வாஜ்பாய் காலத்தில் நடைபெற்ற ஆக்ரா பேச்சுவார்த்தை. அதன்பிறகு மன்மோகன் காலத்தில் நடைபெற்ற பேருந்து டிப்ளமசி, சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து எல்லாம். பாகிஸ்தானுக்கு மோஸ்ட் பிரிபர்டு நாடு என்கிற அந்தஸ்து வழங்கினார். எல்லாம் நன்றாக தான் நடந்தது. நடுவில் ஒரு பயங்கரவாத தாக்குதலால் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிட்டது.

மதச்சார்பற்ற அரசு இருந்தால், நாடு வளர்ச்சியை நோக்கி செல்லும். ஆனால் அங்கே மதவாத அரசு இருந்ததால் பாகிஸ்தான் ஒரு மதவாத நாடாகிவிட்டது. இங்கு மதவாத நாடாக மாற்றும் முயற்சி உள்ள அரசு அமைந்துள்ளது. பகல்காம் தாக்குதலில் பலியான கடற்படை வீரரின் மனைவி ஹிமான்ஷி நர்வால், முஸ்லிம்கள், காஷ்மீரிகள் மீது வெறுப்பை காட்டாதீர்கள் என்று சொன்னதற்காக  அவர் மீது சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்புகிறார்கள். தேசிய மகளிர் ஆணையம் தலையிடும் வரை அது தொடர்ந்தது. பின்னர் ராகுல்காந்தி நேரில் சென்று சந்தித்து ஆறுதல் சொன்னார். திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகாமல் விதவையான அந்த பெண்ணின் மனநிலையை எப்படி பாதித்தார்கள் இந்த சங்கிகள். டோக்லாமில் 20 இந்திய வீரர்களை சீனாக்காரர்கள் கொன்ற நிலையில், ராணுவ வீரர்களே முடிவு செய்த 40 சீனர்களை கொன்றார்கள். அதனால்தான் அவர்கள் பின்வாங்கினார்கள்.

மே 10-ம் தேதி வரை விமான நிலையங்கள் தற்காலிகமாக முடக்கம்…

இந்தியா – பாகிஸ்தான் போர் மூண்டால் அமெரிக்கா, ரஷ்யா நாடுகள் ஆயுதங்களை மட்டும்தான் வழங்கும். தற்போதைய சூழலில் போருக்கு போனால் நமது பொருளாதாரம் என்ன ஆகும். ஒரு 20 நாட்கள் போர் நடத்தினால், 20 வருஷங்கள் பின்னோக்கி போய் விடுவோம். அந்த அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும். போருக்கு பின்னர் மக்களின் மனநிலையே மாறிவிடும். போரையும் தாண்டி இந்த போரின் பின்னணி. இதற்கு பின்னால் இருக்கக்கூடிய காஷ்மீர். காஷ்மீருக்கு எதற்காக சிறப்பு அந்தஸ்து? என இவ்வளவு விஷயங்களை ஆராய்ந்து பார்த்தால்தான் நமக்கு தெளிவு கிடைக்கும். இஸ்லாமிய நாடுகள், இந்திய முஸ்லீம்களை ஆதரிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் அமெரிக்காவை ஆதரிப்பவர்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ