spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜய்க்கு அடி மேல் அடி! உச்சநீதிமன்றத்தில் சிக்கிய ஆதாரம்! மகிழ்நன் நேர்காணல்!

விஜய்க்கு அடி மேல் அடி! உச்சநீதிமன்றத்தில் சிக்கிய ஆதாரம்! மகிழ்நன் நேர்காணல்!

-

- Advertisement -

காவல்துறை பாதுகாப்பு கேட்டதற்கு பின்னணியில் விஜய், பாதிக்கப்பட்டவர்களை பார்க்க போகிறார் என்பதை விளம்பரப்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் மகிழ்நன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கரூரில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திக்க செல்ல பாதுகாப்பு கோரி உள்ளது தொடர்பாக பத்திரிகையாளர் மகிழ்நன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- விஜய் கரூர் செல்வதற்காக பாதுகாப்பு வழங்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் தவெக தரப்பில் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. அதில் விஜய் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டிருக்கிறது. விஜயின் கோரிக்கையில் ஜீரோ டாலரன்ஸ் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்போது விஜய் ரசிகர்கள் மரத்தில் ஏறினாலோ, காருக்கு அருகில் பைக்கில் வந்தாலோ, மேலே ஏறினாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் சொல்கிறார்கள்.

விஜய் வருகிற ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வெளி ஆட்களை அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் விஜய் ரசிகர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளி நின்றாவது பார்த்துவிட்டு போவார்கள். அனிதா, அஜித்குமார், ஸ்னோலின் வீடுகளுக்கு நீங்கள் சென்றபோதும் நீங்கள் சூப்பர் ஸ்டார்தான். அங்கே எந்த வித பிரச்சினையும் ஏற்படவில்லை. அப்போது முன் அறிவிப்பு இன்றி தனி விமானத்தில் நீங்கள் கருர் சென்று வருவதில் எந்த பிரச்சினையும் இல்லை.

கரூர் சம்பவம்: விஜய்க்கு கண்டனம்.... சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

அப்போது காவல்துறை பாதுகாப்பு கேட்டதற்கு பின்னணியில் விஜய், பாதிக்கப்பட்டவர்களை பார்க்க செல்கிறார் என்பதை விளம்பரப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது. இப்படி அறிவித்துவிட்டு செல்வதில் ஒரு அரசியல் நோக்கம் இருக்கிறது. தன்னை யாரோ தடுப்பது போல பாவுலா காட்டுகிறார். ஏர்போர்ட்டில் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு,  ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு யாருக்கும் இருக்கக்கூடாது என்று கேட்கிறார். அவர் இதுநாள் வரை செல்லாமல் இருப்பதற்கு காரணம் மரணத்தின் துயர் தணியட்டும் என்பதால் தான். அந்த மக்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்பதற்கு பதிலாக ரூ.20 லட்சம் கொடுத்தால் போதும் என்று திருப்தி அடைய செய்வதற்கான ஒரு மேப்பூச்சு வேலை நடக்கிறதோ என்று தோன்றுகிறது.

கரூர் மக்களிடம் போய் 41 பேரின் மரணத்திற்கு காரணமானவர்களை தண்டிப்போம். என் கூட நில்லுங்கள் என்று விஜய் சொல்ல மாட்டார். உச்சநீதிமன்றத்தில் எஸ்.ஐ.டி வேண்டாம் என்று வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், எஸ்.ஐ.டி விசாரணை முறையாக நடக்கக்கூடாது என்பதற்காக கூட அவர் போகலாம். இறந்தவர்களின் வீடுகளுக்கு விஜய் செல்கிறபோது, அவருடைய கட்சியை சாராதவர்களோ, நீதி உணர்வு உள்ளவர்களோ நியாயமான கேள்வியை கேட்டால் கூட அவருடைய இமேஜுக்கு பாதிப்பு வந்துவிடும் என்கிற எண்ணம் தான் இங்கே இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமியுடன் விஜய் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, கரூர் விவகாரத்தில் இருந்து தன்னை காப்பாற்றும்படி தான் பேசியிருப்பார். பாஜக உடன் விஜய் நேரடியாக கூட்டணி வைத்தால், மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்போது பாஜக உடன் கூட்டணியில் இருக்கின்ற எடப்பாடி உடன் கூட்டணி வைக்கிறபோது இரண்டும் திராவிட கட்சிகள் என்றாகிவிடும். திமுக உடன் கூட்டணி வைத்த காலத்திலும் கூட, பாஜகவுக்கு திமுக தான் எதிரியாக இருந்துள்ளது. நயினார் நாகேந்திரன், விஜய் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று சொல்கிறபோது, அவருடைய ரசிகர்கள் அதை பார்த்து விஜய்க்காக குரல் கொடுக்கும் நயினார் நல்லவராக இருப்பாரோ என்று நினைக்க செய்வதற்கு மெனக்கெடுகிறார்கள்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி ஆதவ் அர்ஜுனா, பாஜகவை சேர்ந்த உமா உள்ளிட்ட 3 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்கள் விசாரணைக்கு வர உள்ளன. பொதுக்கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரிய வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஐ.டி அமைத்து உத்தரவிட்டார். விஜய் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். அந்த கருத்துக்களை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இது விஜயுடைய இமேஜை பாதுகாப்பதற்கு உச்சநீதிமன்றத்தில் உத்தரவு வாங்குவதற்கான ஒரு முயற்சியாகும்.

விஜய் ஒரு சராசரி மனிதராக இல்லாமல், ஸ்டார்டம்மை வைத்துக்கொண்டிருப்பதால் தான் 41 பேரின் மரணத்திற்கு என்ன காரணம்? என்று யாரும் இன்னும் உணரவில்லை. விஜய் தாமதமாக வந்ததற்கோ, கூட்டநெரிசல் ஏற்பட்டபோது பேருந்தில் உள்ளே சென்றதற்கோ தவறு என்று நினைக்கவில்லை. எஸ்.ஐ.டியில் எல்லோரும் தமிழக காவல்துறையினராக இருப்பதால் அது வேண்டாம் என்கிறார்கள். உச்சநீதிமன்ற மேற்பார்வையில் எஸ்.ஐ.டி விசாரணை வேண்டும் என்று சொல்கிறார்கள்.

தமிழகத்தில் மருத்துவக்கட்டமைப்பு சரியில்லை என்று சொல்கிறார்கள். அப்படி மருத்துவக்கட்டமைப்பு உண்மையிலேயே சரியில்லை என்றால் 41 கொலைப்பழிக்கு பதிலாக இன்னும் அதிகமாக இருந்திருக்கும். அப்போது புஸ்ஸி ஆனந்த் கண்டம் விட்டு கண்டம் தப்பியோடி இருப்பார். உண்மையை எதிர்கொள்ள துணிச்சல் இல்லாமல், தன்னுடைய ரசிகர்கள் யோகியர்கள் என்கிறார்கள். மறுபுறம் காவல்துறையினரிடம் என்னுடைய ரசிகர்கள் ஆகாவழி என்று சொல்லி பாதுகாப்பு கேட்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமியை விஜய் அடிமை என்று சொன்னார். இன்றைக்கு அந்த எடப்பாடிக்கு விஜய் அடிமையாகிவிட்டார். எடப்பாடிக்கு என்ன மகிழ்ச்சி என்றால் விஜய் ரசிகர்கள் எல்லாம் இனி விஜய்க்கு ஓட்டு போட்டுவிடுவார்கள் என்பதுதான். ஆனால் விஜய் ரசிகர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள்தான். அவர்களுக்கு வாக்குகளே கிடையாது. அப்போது எடப்பாடி பழனிசாமி கனவு நிறைவேறப் போவது இல்லை. உச்சநீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்துவதற்கு தான் பவன் கல்யாண், எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். மனு முதலில் போடப்பட்டது எடப்பாடியிடம். அதற்கு பிறகு அதனுடைய நகலை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். முடிவு என்ன என்பது யூகமாகவே தெரியும். தமிழ்நாடு எதிர்த்து நிற்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ