spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅதிமுக கூட்டணிக்கு செல்லும் விஜய்? டிசம்பரில் வரும் மாற்றம்! அய்யநாதன் நேர்காணல்!

அதிமுக கூட்டணிக்கு செல்லும் விஜய்? டிசம்பரில் வரும் மாற்றம்! அய்யநாதன் நேர்காணல்!

-

- Advertisement -

தவெகவுக்கு எதிரான அடக்குமுறை, ஊழல் போன்ற குற்றச்சாட்டுகளை வைத்து வரும் டிசம்பரில் விஜய், என்டிஏ கூட்டணியில் சேர்ந்துவிடுவார். அதுதான் கிறிஸ்துமஸ் பரிசாக இருக்கப் போகிறது என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

எடப்பாடி பழனிசாமி – பைஜெயந்த் பாண்டா சந்திப்பு, விஜயின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு உள்ளிட்டவை குறித்து  மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தமிழக பாஜக துதேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்தித்து பேசியுள்ளார். இவர்கள் முதலில் தமிழக அரசுக்கு எதிரான நேரேட்டிவை செட் செய்கிறார்கள். எதை பாஜக கூட்டணி முன்னெடுக்க வேண்டும் என்று முடிவு செய்வார்கள். குறிப்பாக தமிழகத்தில் ஆன்மீகம் புறக்கணிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்பது போன்ற நேரட்டிவை செட் செய்வார்கள். ஸ்டாலின் சாதனையை சொல்வார். அவர்களிடம் அப்படி சொல்வதற்கு எதுவும் கிடையாது. அதனால் தான் மோடி 8 முறை தமிழ்நாட்டிற்கு வந்தும் தோல்வி அடைந்தார்கள்.

அமித்ஷா, முதலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த நிலையில், அடுத்தக்கட்டமாக தொகுதி பங்கீட்டிற்கு வந்துவிடுகிறார். தொகுதி பங்கீடு விவகாரத்தில் மிகவும் வலுக்கட்டாயமாக இருந்து அவர் முடித்துவிடுகிறார். அப்போது தான் எடப்பாடி பழனிசாமி முகத்தை கைக்குட்டையால் மூடியபடி காரில் சென்றது சர்ச்சையானது. தற்போது எந்த தொகுதிகளில் பாஜக போட்டியிடுவது என்று அடையாளம் காண்கிற வேலைகளில் இருக்கிறார்கள். பாஜக குறைந்தபட்சம் 30 பேர் உள்ளே போய்விட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

பாஜக – அதிமுக கூட்டணியில், ஆட்சி நிர்வாகத்தில் பாஜக கை ஓங்கிவிடும் என்று பயப்படுவதற்கு காரணம் என்ன என்றால்? மோடி – அமித்ஷாவால் நாட்டில் உள்ள எந்த ஒரு அரசியல்வாதியையும் ஒழித்து கட்டிவிட முடியும் என்கிற அச்சத்தை  விதைத்துவிட்டார்கள். பாஜகவை பொறுத்தவரை தற்போதைய கூட்டணி, திமுக கூட்டணியை வெல்லும் அளவுக்கு வலிமையானதாக இல்லை. எனவே கூட்டணியை வலிமையாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். எனவே டிடிவி தினகரனையோ, ஓ.பன்னீர்செல்வத்தையோ அவர்கள் விட்டுவிடத் தயாராக உள்ளனர். ராமதாசை கூட்டணிக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி விஐயை கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்கிற எண்ணமும் பைஜெயந்த் பாண்டாவிடம் உள்ளது. அதனால்தான் கரூர் துயர சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவாக, அவர் மீது தப்பு இல்லை என்று நேரேட்டிவ் செட் செய்தார்கள். ஆனால் நீதிமன்றம் அவர்களின் நேரேட்டிவை உடைத்துவிட்டது. எனவே விஜய், தங்களுக்கு எதிரான அடக்கு முறை, ஊழல் போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, திமுகவை ஒழிப்பதுதான் தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கான ஒரே வழி என்று பாஜக கூட்டணியில் சேர்ந்துவிடுவார். அதுதான் கிறிஸ்துமஸ்க்கான செய்தியாக இருக்கப் போகிறது. மற்றபடி விஜயால் ஸ்டிரைக் செய்ய முடியாது.

விஜய், திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்றும் சொல்வது அரசியல் வியூகமோ, இலக்கோ கிடையாது. இன்னும் சொல்வதென்றால் இது ஒரு பாசிசம். திமுகவிடம் என்ன என்ன தன்மைகள் இருப்பதாக குறிப்பிடுகிறாரோ, அவை எல்லாம் அதிமுக, பாஜகவிடமும் உள்ளது. ஆனால் அவர்கள் குறித்து ஏன் விஜய் பேச மறுக்கிறார். எனக்கும் விஜய்க்குமான முரணே அதுதான். எப்படி திமுகவை குற்றம்சாட்டிவிட்டு, அதிமுகவிடம் நீங்கள் பேச்சுவார்த்தை நடத்துவீர்கள்? அப்போது விஜயை நம்பி வருபவர்களை அவர் தவறாக வழிநடத்துகிறார். அந்த அரசியல் சரிப்பட்டு வராது. திமுக ஆளுங்கட்சியாக இருப்பதற்காக விஜய் எதிர்க்கவில்லை. அவர் ஊழல், குடும்ப ஆட்சி என்று தான் எதிர்க்கிறார்கள்.

காரணம் அதிமுக, விஜய், பாஜக என எல்லோருக்கும், ஸ்டாலினை சாதனையை சொல்லி வீழ்த்த முடியாது என்பது தெரியும்.  கீழ்நிலையில் உள்ள 40 சதவீதம் வாக்காளர்கள் திமுகவிடம் உள்ளனர். அதை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. இடையில் தமிழ்நாடு, உரிமை என்று பேசுகிறவர்களிடம் ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். அப்போது மேலே உள்ள 40 சதவீதம் பேரை தான் இவர்கள் பிடித்துக்கொள்ள வேண்டும். அதனை அவ்வளவு சாதாரணமாக பிடிக்க முடியாது. அதனால்தான் கட்சி ரீதியாக போய்விடலாம் என்கிறார் அமித்ஷா.

சமத்துவத்தை நோக்கி நமது சமூகம் நகர வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

அதிமுக – பாஜக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் தினகரனின் முடிவு சரியானது அல்ல. கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் தான் கூடி முடிவு எடுப்பார்கள். கூட்டணியில் மைனர் பார்ட்னராக உள்ள தினகரன் எப்படி அதை முடிவு செய்ய முடியும்? அவர் தன்னுடைய முடிவை விரைவில் மாற்றிக்கொள்வார். திமுகவை வீழ்த்த வேண்டும் என்கிற அமித்ஷா லைனுக்கு விரைவில் வந்துவிடுவார்கள். அப்படி வந்தால்தான் அவர்களுக்கான அரசியல் உள்ளது. மாநாடு போடப் போகிறேன் என்று சொன்ன ஓபிஎஸ்-ஐ அமைதியாகிக்கி விட்டனர்.

தமிழ்நாட்டில் இரு முனை போட்டிதான். சீமான், விஜய், எடப்பாடி, பாஜக என எல்லோரும் திமுக ஆட்சியை வீழ்த்தப் போவதாக தான் சொல்கிறார்கள். இவர்களுக்கு ஒரே எண்ணம் தமிழ்நாட்டில் வென்றாக வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் சிந்தனையோடு அவர்கள் பொருந்தவே இல்லை. அஜெண்டாவை வைத்து உள்ளே தள்ளுகிறார்கள். ஸ்டாலின், எதிர்க்கட்சிகள் எங்கே வேண்டுமானாலும் போகட்டும். பதில் சொல்வதற்கான தன்னுடைய நேரம் ஜனவரியில் தொடங்குகிறது. அப்போது நான் பதில் சொல்கிறேன் என்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ