spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகரூருக்கு போக வக்கில்லையா விஜய்? பனையூரில் இருந்து வீடியோ கால்! பொன்ராஜ் நேர்காணல்!

கரூருக்கு போக வக்கில்லையா விஜய்? பனையூரில் இருந்து வீடியோ கால்! பொன்ராஜ் நேர்காணல்!

-

- Advertisement -

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் மீண்டும் அரசியலுக்கு வர நினைத்தால், அவர் தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரவித்துள்ளார்.

we-r-hiring

கரூர் துயர சம்பவம் தொடர்பாக அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகரும், அரசியல் விமர்சகருமான பொன்ராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கைது நடவடிக்கைக்கு பயந்தவர்கள் அரசியலுக்கு தகுதியற்றவர்கள் ஆவர். விஜய், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரை அரசு கைது செய்தால் சிறைக்கு செல்லுங்கள். பின்னர் ஜாமினில் வெளிவந்து வழக்கை சந்தியுங்கள். இதற்கு எதற்கு பயப்பட வேண்டும்? ஆனால் சிறை செல்வதற்கு பயந்து யார் காலில் நீங்கள் விழுந்துள்ளீர்கள்? 3 நாட்கள் போய் வீட்டில் உட்கார்ந்து கொண்ட விஜய், 2வது நாளில் குருமூர்த்தியிடம் பேச ஆட்களை அனுப்பி வைத்தார்.

பின்னர் குருமூர்த்தியை தனது பட்டினப்பாக்கம் வீட்டிற்கு வரச்சொல்லி, பேசிய பிறகு 4-வது நாளில் வீடியோ போடுகிறார். அந்த வீடியோவில் 41 பேர் இறந்ததற்காக மன்னிப்பு கேட்டீர்களா? வருத்தம் தெரிவித்தீர்களா? எதுவும் கிடையாது. விஜய் போகிற இடமெல்லாம் கொலை விழுகிறது. இதற்கு காரணமாக அவருடைய தொண்டர்களே இருக்கிறார்கள். இத்தனையும் பிளான் போட்டது நீங்கள் தானே? ஆனால் கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் முதலமைச்சருக்கு சவால் விடுகிறீர்கள்.

உங்களுக்கு உறுதுணையாக இருந்தது போலீஸ். உங்களுக்கு முன்னெச்சரிக்கை விடுத்தது போலீஸ். களத்தில் இறங்கி மக்களை காப்பாற்றியதும் போலீஸ். ஆம்புலன்சை கொண்டுவந்து மக்களை மருத்துவமனையில் சேர்த்தது. ஆனால் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை உங்கள் ஆட்கள் தாக்கினார்கள். களத்தில் முதலமைச்சர் செந்தில் பாலாஜி, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷை அனுப்பினார். 300க்கும் மேற்பட்ட மருத்துவர்களை உள்ளே கொண்டுவந்தார். இத்தனை நடவடிக்கைகள் எடுத்த பிறகும் எப்படி அவர்கள் மீது குற்றச்சாட்டை சொல்கிறீர்கள்?

முதல்வர் மட்டும் அன்று போகாமல் இருந்திருந்தாலோ, அல்லது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருந்தாலோ, என்ன ஆகி இருக்கும்? 40 பேர் இறந்தது, இன்று 100 பேர் ஆக அதிகரித்திருக்கும். 100 பேர் இறந்து, அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யாமல் மறுநாள் வரை வைத்திருந்து முதல்வர் அரசியல் ஆதாயம் தேடலாம் என நினைத்திருந்தால்? ஒட்டுமொத்த கருர் மக்களும் மருத்துவமனைக்கு வந்து, ஒரு மிகப் பெரிய கலவரத்தை உருவாக்கி, அதை விய்க்கு எதிராக திருப்பிவிட்டு அவருடைய வீட்டை கொளுத்தி இருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாததால் இன்றைக்கு முதலமைச்சரை குற்றம்சாட்டுகிறார்.

உங்களை அன்பாக பார்க்க வந்த பெண்கள், குழந்தைகள் இன்றைக்கு செத்து சுடுகாட்டிற்கு போய்விட்டார்கள். நீங்கள் வீடியோ கால் போட்ட உடன் அவர்கள் ஆன்மா சாந்தி அடைந்துவிடுமா? நீங்கள் காரை எடுத்துக்கொண்டு போனால், போலீசார் உங்களை அவர்களின் கூப்பிட்டு போக போகிறார்கள். தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் கைதுக்கு பயந்து தலைமறைவாகி விட்ட நிலையில், அவர்கள் இல்லாவிட்டால் நீங்கள் இல்லை என்று தானே அர்த்தம்? இன்றைக்கு பாஜக உங்களுக்கு ஆதரவு அளிக்கிறது. அவர்களின் ஆலோசனைப்படி ஆனந்த் ஒளிந்துகொண்டிருக்கிறார். ஆதவ் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற முயற்சித்து வருகிறார்.

இது தொடர்பாக அமித்ஷா உங்களிடம் பேசி விட்ட நிலையில், சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் முயற்சிக்கிறீர்கள். காவல்துறை இன்றைக்கு நினைத்திருந்தால் விஜய் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்திருப்பார்கள். ஜென்ஸீ புரட்சி வரும் என்று சொன்ன ஆதவ் அர்ஜுனாவை உபா சட்டத்தில் தூக்கி உள்ளே வைத்திருக்க வேண்டாமா? இத்தனை செய்யாத காவல் துறை மீது நீங்கள் குற்றம்சாட்டத்தான் செய்வீர்கள். இதை எல்லாம் செய்யாமல் எஸ்.ஐ.டி போட்டு, ஒரு நபர் ஆணையம் அமைத்து இன்னும் பொறுமையாக இருக்கிறார் முதலமைச்சர். அப்போது அவரை கேள்வி தான் கேட்பார்கள்.

இத்தகைய சூழலில் சிபிஐ விசாரணை கோரி விஜய் உச்சநீதிமன்றம் செல்கிறார் என்றால்? அங்கே டீல் முடிந்துவிட்டது என்றுதான் அர்த்தம். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால், விஜய் பாஜகவலையில் விழுந்துவிட்டார் என்று தான் அர்த்தம். அப்போது விஜய் பொதுவெளியில் தான் யார் என்று அம்பலப்பட்டு விட்டார். நீங்கள் பாஜகவால் உருவாக்கப்பட்டவர். உங்கள் பின்னாடி இருக்கும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ், அருண்ராஜ் உள்ளிட்ட அனைவரும் பாஜகவை சார்ந்தவர்கள். உங்களை இயக்குபவர்களும் பாஜகவை சார்ந்தவர்கள். பாஜகவின் வழிகாட்டுதலில் இயங்குபவர்கள்.

கடைசியில் நீங்கள் குருமூர்த்தி காலில் விழுந்தீர்கள். அதன் பிறகு வீடியோ போட்டீர்கள். தற்போது அமித்ஷா உங்களிடம் பேசியுள்ளார். உங்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கிய அமித்ஷா தான்,  இன்றைக்கு உங்களை காப்பாற்றப் போகிறார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு வரும் போது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். சிபிஐ விசாரணையில் தப்பி விடலாம். நீங்கள் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்து விடுங்கள். அவ்வளவுதான் முடிந்துவிட்டதா? இன்றைக்கு மக்கள் மத்தியில் பாஜகவின் நேரடி டீமே நீங்கள் தான் என்பது தெரிந்துவிட்டது. இனி எங்கே அவர் மக்கள் மத்தியில் போய் நிற்பார்? அவரை நம்பி மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்?

இத்தகைய சூழலில் விஜய் மீண்டும் அரசியலுக்கு வர நினைத்தால், அவர் தன்னை சுய பரிசோதனை செய்ய வேண்டும். தன் கட்சியினரை, ரசிகர்களை கூட்டத்தை தற்குறி என்கிற நிலையில் இருந்து அரசியல் அறிவு பெற்ற ஒரு அமைப்பாக மாற்ற வேண்டும்.  உங்களிடம் இருக்கும் அதிகார வெறி, அரசியல் போதை, புகழ் போதை ஆகியவற்றை தூக்கி ஓரம் வைத்துவிட்டு மக்களோடு மக்களாக நிற்கக் கூடியவராக மாற வேண்டும். நீங்கள் இன்று வரை நகடிகராக தான் இருக்கிறீர்கள். தலைவனாக மாறவே இல்லை. முதலில் விஜய் தன்னை தரமான அரசியல் தலைவராக பக்குவப் படுத்தி நிலை நிறுத்திக்கொள்வதற்கு உழைக்க வேண்டும். அரசியல் தெளிவு பெற வேண்டும். அரசியல் புரிந்தவர்களை பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற தற்குறிகளை பக்கத்தில் வைத்துக்கொள்ளக் கூடாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ