கரூர் சம்பவத்தை தொடர்ந்து விஜய் இனி பேருந்தில் சுற்றுபயணம் செல்வதற்கு தகுதி அற்றவராகிவிட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் நடிகர் விஜய் வீடியோ காலில் பேசி இருப்பது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது :- கரூர் சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் இனி யாரும் தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாத அளவுக்கு விஜய் இழுத்து மூடிவிட்டார். எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி கிடைப்பது தாமதமாகியுள்ளதால், அவர் பிரச்சாரத்தை ஒத்திவைத்திருக்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் விஜய் என்ன தவறு செய்தார் என்கிறார்கள். அவர்கள் இதற்குள் உள்ள உள் அரசியல் தெரியாத ஏழை மக்கள். அந்த மக்கள் விஜயை விட்டுக் கொடுக்கவில்லை என்பது அவருக்கு நல்ல விஷயம்தான். ஆனால் மக்கள் மீது துளியும் அக்கறை இல்லாத ஒரு தன்மையை நான் பார்க்கிறேன். விஜய், உயிரிழந்த நபரின் தங்கையிடம் தான் அண்ணன் போன்று இருந்து பார்த்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் எந்த அண்ணனும், தன் குடும்பத்தினர் இறந்தபோது கைவிட்டு ஓடமாட்டார். நீதிபதி செந்தில்குமார் நியாயமாக சில கேள்விகளை எழுப்பினார். பிரச்சினை என்றால் தொண்டர்களை கைவிட்டு ஓடுகிற தலைமை என்ன தலைமை? என்று கேட்டார். எனவே விஜய் தன்னை அண்ணன், தாய் மாமன் என்று சொல்வது சரியானது அல்ல. அவர் தன்னை ஒரு தலைவன் என்று தான் சொல்ல வேண்டும்.
விஜய் வரும் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கரூர் செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விஜயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர் ஒரு உறவினர். அதனால் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் தவறு விஜய், அதை புரிந்துகொள்ளவில்லை என்பதுதான். தன்னை நேசிக்கும் மக்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாக நாம் இருக்கிறோமா? என்பதுதான் முக்கியம். அப்போது இருவரும் மாறுவது போல தெரியவில்லை. இந்த சூழலில் விஜய் கரூருக்கு செல்கிறபோது, அது அனுதாபாக மாறுகிற வாய்ப்பு உள்ளது. ஆனால் சிந்திக்கக்கூடிய மக்கள் யாரும் தவெகவை பாராட்ட மாட்டார்கள். விஜயை நேசிக்க மாட்டார்கள். அப்படி ஒரு மனநிலையில் இருந்தால் அவர்கள் மாறியிருப்பார்கள். தமிழ் நாட்டில் விஜயகாந்த் போன்றவர்களுக்கு நிறைய கூட்டங்களுக்கு பலர் வந்தபோதும், அங்கே கூட்டநெரிசல் ஏற்படவில்லை. விஜய் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள், பெரிய பேருந்தில் செல்வதற்கு தகுதி அற்றவர்கள். அவர்கள் ரோடு ஷோ நடத்துவதற்கு தகுதி அற்றவர்கள்.
திமுக ஆட்சியாளர்கள் விஜயை தொட பயப்படுகிறார்கள். 41 பேர் இறந்திருக்கிறார்கள். வேறு எங்காவது இறந்திருந்தால் இப்படி செய்வார்களா? இருப்பதிலேயே மிகவும் மோசமான தேர்தல் வியூக வகுப்பாளர் என்றால் ஜான் ஆரோக்கியசாமிதான். விஜய் அரசியலுக்குள் வந்த உடன் பாசிட்டிவ் ஆக இருந்தார். ஆனால் இரண்டாவது சுற்றில் அவர் நாக் அவுட் ஆகிவிட்டார். தன்னுடைய சொந்த தொண்டர்களை பார்க்கவே யாராவது கூட வருவார்களா? என்று வீடியோ காலில் போன் செய்து துக்கம் விசாரிக்கும் நிலையில் தான் இருக்கிறார். நிர்வாகிகள் எல்லாம் தலைமறைவாகி விட்டனர். பின்னர் எப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்க முடியும். கருர் துயர சம்பவத்திற்கு மாவட்ட செயலாளர் தான் காரணமா? அவர்களுடைய குடும்பத்தினர் என்ன என்ன அவதூறுகளை பரப்புகிறார்கள். காவல்துறை மீது அவதூறு பரப்ப எல்லை இல்லையா?. இதற்குள் உள்ள அரசியலுக்குள் நான் போகவில்லை. ஆனால் இவர்களாக பார்த்து திருந்த வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.