கரூர் கூட்டநெரிசல் மரணம் தொடர்பாக முழுமையான வீடியோ ஆதரங்கள் உள்ளதாகவும், விஜய் தரப்பில் எந்த தவறும் செய்யவில்லை என்று சொல்லி தப்பிக்க முடியாது என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

கரூர் துயர சம்பவம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்தில் தவெக கொடியுடன் தொண்டர்கள் பங்கேற்றதால் இரு கட்சிகளுக்கும் கூட்டணி ஏற்பட போகிறதா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் தவெக தொண்டர்கள் அல்ல. அதிமுகவினர்தான். அவர்களும் கூட்டத்தில் கலந்திருப்பதாக காட்டுகிறார்கள். தவெக தரப்பில் இந்த நிகழ்வுக்கு யாரும் எதிர்ப்பு தெரியவில்லை. கருர் விவகாரம் தொடர்பாக கட்சியின் நிர்வாகிகள் எல்லாம் தலைமறைவாகிவிட்ட நிலையில், இவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். தவெக பிரச்சாத்தில் கூட்டநெரிசல் மரணங்கள் ஏற்பட்டு 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் கரூருக்கு போக அனுமதி கேட்டு டிஜிபியிடம் மனுக் கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் கரூருக்கு செல்வதற்கு யாரும் தடை விதிக்கவில்லை. ஆனால் எதே இவர் செல்ல தடை விதிக்கப்பட்டதை போன்று அனுமதி கேட்கிறார். இல்லாவிட்டால் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை எல்லாம் பார்த்துவிடுவார். இதெல்லாம் நாடகம் என்பது விவரம் தெரிந்தவர்களுக்கு தெரிந்துவிடும். தற்குறிகளுக்கு தெரியாது.
கரூரில் பாதிக்கப்பட்ட நபர்களுடன் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார். தனிப்பட்ட முறையில் அவர் பேசியிருந்தால் பிரச்சினை இல்லை. அரசியலுக்கு வந்துவிட்ட பின்னர் அவர் பாதிக்கப் பட்டவர்களுடன் பேசியது குறித்து கட்சியில் இருந்து அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். தவெகவின் பொதுச்செயலாளர், துணைப் பொதுச் செயலாளர்கள் தப்பியோடி விட்டனர். மாவட்ட செயலாளர் சிறையில் உள்ளார். தவெகவின் முக்கிய தலைவர்கள் எல்லாம் தப்பியோடிவிட்டனர். இவர்கள் எல்லாம் ஜென்ஸீ புரட்சி செய்கிறார்கள். விஜயிடம் வீடியோ காலில் ரெக்கார்டு செய்ய வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். ஒருவேளை வீடியோ காலில் அவர்கள் விஜயிடம் கோபத்தை வெளிப்படுத்தி இருந்து, அது வெளியானால் பிரச்சினை ஆகிவிடும் என்று இதை ரெக்கார்டு செய்ய வேண்டாம் என்று சொல்லி இருப்பார்கள். ஆனால் அப்படியான வீடியோக்கள் இனிமேல்தான் வெளியே வரும். தவெக ஐ.டி. விங்கில் எல்லோவற்றையும் ரெக்கார்டு செய்கிறார்கள். அதேபோல் இதையும் ரெக்கார்டு செய்கிறார்கள்.
நீதிபதி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் தவெகவினர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தவெக தரப்பில் வழக்கறிஞர்கள் எந்த உதவிகளையும் செய்யவில்லை. புஸ்ஸீ ஆனந்த் வந்த பிறகுதான் அவர்கள் வழக்கு தொடர்வார்கள். ஐஐஎம்மில் படித்துவிட்டு ஒருவர் அவதூறான பதிவை போட்டிருக்கிறார். அவருடைய வாழ்க்கை அவ்வளவுதான். நீதிபதி குறித்து வதந்தி பரப்பியதற்காக முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். திராவிட மயமாகிறதா? நீதித்துறை என்று பதிவு போடுகிறார். ஆனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீசியது குறித்து பேச மறுக்கிறார். விஜய் பிரச்சாரத்தின்போது நடைபெற்ற நிகழ்வுகள் வீடியோவாக ரெக்கார்டு செய்யப்பட்டிருக்கிறது. அனைத்து சம்பவங்களுக்கும் வீடியோ ஆதாரங்கள் இருக்கிறது. இதில் விஜய் தரப்பினர் தவறு செய்யவில்லை என்று எங்குமே சொல்லவே முடியாது. அவர்கள் செய்தது அனைத்தும் தவறு என்பதற்கான ரெக்கார்டிங் ஆதாரங்கள் உள்ளன. சரியான விசாரணை நடைபெறுகிறபோது எல்லாம் வெளியே வரும்.
கரூர் துயர சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டிருக்கும் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் 90 நாட்களில் தன்னுடைய விசாரணை அறிக்கையை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. 90 நாட்கள் என்பது மிகவும் அதிகமாகும். அதிகபட்சம் 40 நாட்களுக்குள் விசாரணையை நிறைவு செய்ய வேண்டும். அருணா ஜெகதீசன், விபத்து நடைபெற்ற பகுதியை எல்லாம் பார்த்துவிட்டார். இனி பாதிக்கப்பட்டவர்களை ஒவ்வொரு குடும்பங்களாக சந்திக்க வேண்டி உள்ளது. விசாரணை நிறைவு செய்த பின்னர் அதனை அறிக்கையாக அரசிடம் வழங்க வேண்டி உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் அறிக்கையை விரைந்து வழங்கிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இந்த சம்பவத்தின் மூலம் விஜயை சந்திக்கிறோம் என்கிற எண்ணத்தில் இருப்பார்கள். ஆனால் அரசாங்கம் அப்படி பார்க்க முடியாது. கரூரில் இப்படியான ஒரு துயரம் நடைபெற்றுள்ள நிலையில், அரசாங்கம் அது எப்படி நடைபெற்றது? அதற்கான காரணத்தை கண்டறிந்து உரியவர்களுக்கு தண்டனையை பெற்றுத்தர வேண்டும். இந்த விவகாரத்தை சீமான் வழக்கு போன்று அப்படியே கைவிட்டு விட முடியாது. இந்த விவகாரத்தில் என்ன நியாயம் கிடைக்கிறது என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.