spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதோல்வியை ஒப்புக்கொண்ட அதிமுக - பாஜக கூட்டணி! தராசு ஷ்யாம் நேர்காணல்!

தோல்வியை ஒப்புக்கொண்ட அதிமுக – பாஜக கூட்டணி! தராசு ஷ்யாம் நேர்காணல்!

-

- Advertisement -

விஜயை கூட்டணிக்கு அழைத்துள்ளதன் மூலம் தற்போதுள்ள அதிமுக – பாஜக கூட்டணியால் திமுகவை வீழ்த்த முடியாது என்பதை ஒப்புக்கொண்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- விஜயின் வருகையால் திமுகவின் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படும் என்று சொல்வதில் எனக்கு மாற்றுக்கருத்து உள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு என்று ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவீதம் உள்ளது. அந்த வாக்குகள் விஜயால் பாதிக்கப்படாது. இன்றைய தேதிக்கு திமுக ஆளுங்கட்சி. அவர்கள் மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வர முயற்சிக்கிறார்கள். அதற்கு அவர்கள் கைகளில் இருக்கும் ஆயுதம் கோர் ஓட் பேங்க் மற்றும் ஆட்சியின் நலத்திட்டங்களை சொல்லி வாக்கு சேகரிப்பார்கள்.

எதிர்க்கட்சிகளை பொருத்தமட்டில் அவர்களுடைய கோர் வாக்கு வங்கி மற்றும் ஆட்சியின் தவறுகளை சொல்லி ஓட்டு கேட்பார்கள். எதிர்க்கட்சிகள் என்கிறபோது அதிமுகவுக்கு என்று கோர் ஓட் பேங்க் உள்ளது. ஆனால் ஜெயலலிதா காலத்தில் இருந்த வாக்கு வங்கி தற்போது எடப்பாடிக்கு கிடையாது. 2024 வாக்கு சதவீதத்தை அடிப்படையாக வைத்துக் கொள்கிறபோது, அதிமுவுக்கு என்று வாக்கு சதவீதம் உள்ளது. அவர்களுடன் பாஜக சேர்கிறபோது, அதன் வாக்கு வங்கியில் அதிமுக எதிர்ப்பு வாக்குகளும் உள்ளன. அதிமுக – பாஜக கூட்டணியில் மாறுபட்ட வாக்குகள் வருகிறது. ஆனால் திமுகவிடம் பழைய வாக்குகள் தொடர்கிறது.

தற்போது விஜய் வருகிறபோது, எப்படி இந்த வாக்குகளை பாதிப்பார். விஜய் புதிய வாக்கு வங்கியை உருவாக்க வேண்டும். அவருக்கு என்று ரசிகர்கள் வாக்குகள் உள்ளது. அதற்கு மேல் சாதாரண வாக்காளர்களை அவர் உள்ளே கொண்டுவர வேண்டும். அப்போது, மற்றவர்களிடம் இருந்துதான் அவர் எடுக்க வேண்டும். மக்களிடையே அடுத்த ஆட்சி தொடர்பாக பல்வேறு மனப்பான்மைகள் உள்ளன. முதலாவது திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதாகும். விஜய் வந்துவிட்டார் இனி அவ்வளவுதான் என்கிற மனப்பான்மை உள்ளது.

கருரில் நடைபெற்ற சம்பவத்திற்கு திமுக தான் காரணம். இதனால் விஜயின் வாக்கு வங்கி கூடும் என்று சொல்கிறார்கள். ஆனால் அரசியல் என்பது அப்படி அல்ல. நமக்கு அமைப்பு ரீதியாக பலமும் வேண்டும். தேர்தலில் செலவு செய்யவும் வேண்டும். விஜய் என்பவர் தன்னுடைய கட்சியை பலப்படுத்திவிடலாம். ஏப்ரல் மாதம் தேர்தல் வரும். அப்போது ஒரு பெரிய முடிவு எடுக்க வேண்டிய நிர்பந்தம் மார்ச் மாதத்தில் வரும். யார் யார் எந்த கூட்டணி என்று முடிவு எடுக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி ராமதாசை சென்று சந்திக்கிறார். அதற்கு முன்பாக முதலமைச்சர் சென்று சந்தக்கிறார். இதன் பின்னணியில் கூட்டணி கணக்குகள் உள்ளதல்லவா?

கருரில் ஒரு பெரிய துயர சம்பவம் நடைபெற்றுவிட்டது. அதற்கு பிறகு விஜய் கொடுத்த எந்த ஒரு ரியாக்ஷனும் நடப்பு அரசியலில் முழுமையாக காலி. எந்த கட்சியும், எந்த தலைவரும் இப்படி நடந்துகொள்ள மாட்டார்கள். கூட்டநெரிசல் சம்பவத்திற்கு யார் வேண்டும் என்றாலும் பொறுப்பாக இருக்கலாம். ஆனால் நம்மை பார்க்க வந்துதானே இறந்து போனார்கள் என்கிற கழிவிறக்கம் அவரிடம் வரவில்லை. அப்போது விஜய் தோற்றுவிட்டார். இந்நிலையில், விஜய் வந்தால் 10 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்று நினைக்கிறவர்கள் விஜயை பார்க்க முயற்சிக்கவில்லை.

விஜயும் அவர்களை பார்க்க முயற்சி செய்யவில்லை. ராகுல்காந்தி மட்டும் பேசுகிறார். அதை வைத்து கூட்டணி கணக்கு போட முடியவில்லை. பாஜகவுக்கும் கூட்டணி எண்ணம் இருக்கும். அடிப்படையில் அவர்கள் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்கிறார்கள். அதிமுக – பாஜக தற்போதுள்ள கூட்டணியில் திமுகவை
வீழ்த்த முடியாது. கூட்டணிக்கு மற்றொருவர் தேவை என்று நினைக்கிறார்கள் என்பதுதான்  உண்மை. அப்போது இவர்களுடைய பலம் பலவீனம் வெட்ட வெளிச்சமாகி விடுகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ