நீட் தேர்வு மோசடி தொடர்பான வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் விரிவான தீர்ப்பு வழங்க உள்ளது.
கடந்த மே மாதம் நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் கேள்வித்தாள் கசிவு, ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர் முதல் மதிப்பெண் எடுத்தது என்பன உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் அரங்கேறின. மேலும், சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதால் பலர் முதல் மதிப்பெண் பெற்றனர். இதனை அடுத்து நீட் தேர்வு மோசடிக்கு எதிராக உச்சநிதிமன்றத்தில் 35 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த 23ஆம் தேதி இடைக்கால தீர்ப்பு வழங்கியது. அதில் நீட் தேர்வில் பெருமளவுக்கு மோசடி நடைபெறவில்லை என்று சிபிஐ தாக்கல் செய்த அறிக்கை அடிப்படையில் மறுதேர்வு நடத்த தேவை இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனிடையே நாளை தலைமை நீதிபதி அமர்வு நீட் மோசடி வழக்குகளில் விரிவான தீர்ப்பளிக்கிறது.