
2024- 25 ஆம் கல்வியாண்டிற்கான நீட், கியூட், நெட் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது தொடர்பான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

லெக்ராஞ்சியின் புள்ளியை நோக்கிய பயணத்தைத் தொடங்கிய ஆதித்யா- எல்1 விண்கலம்!
அதன்படி, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, 2024- ஆம் ஆண்டு மே மாதம் 05- ஆம் தேதி நடைபெறுகிறது. அதேபோல், ஜெ.இ.இ. மெயின் முதற்கட்டத் தேர்வு 2024- ஆம் ஆண்டு ஜனவரி 24- ஆம் தேதி முதல் பிப்ரவரி 01- ஆம் தேதிக்குள், ஜெ.இ.இ. மெயின் (JEE Main) இரண்டாம் கட்டத் தேர்வு 2024- ஆம் ஆண்டு ஏப்ரல் 01- ஆம் தேதி முதல் ஏப்ரல் 15- ஆம் தேதிக்குள், இளநிலைப் படிப்புகளுக்கான கியூட் நுழைவுத் தேர்வு (CUET-UG) 2024- ஆம் ஆண்டு மே 15- ஆம் தேதி முதல் மே 31- ஆம் தேதிக்குள், முதுநிலைப் படிப்புகளுக்கான கியூட் நுழைவுத் தேர்வு (CUET-PG) மார்ச் 11- ஆம் தேதி முதல் மார்ச் 28- ஆம் தேதிக்குள், நெட் தேர்வு (UGC- NET) 2024- ஆம் ஆண்டு ஜூன் 10- ஆம் தேதி முதல் ஜூன் 21- ஆம் தேதிக்குள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் ஆடையை கழற்றி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போலீஸ்காரர்
இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு www.nta.ac.in என்ற தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


