spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபுதிய நாடாளுமன்றத் திறப்பு விழா- எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் பதில்!

புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா- எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் பதில்!

-

- Advertisement -

 

புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா- எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் பதில்!
Photo: ANI

நாடாளுமன்றத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக இடதுசாரி கட்சிகள், திரிணாமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மீ உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளனர். முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் இதே நிலைப்பாட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

we-r-hiring

லாரியில் ஏறி ஓட்டுநருடன் பேசியபடி சிறிது தூரம் பயணம் செய்த ராகுல் காந்தி!

தலைநகர் டெல்லியில் தற்போது உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு பதிலாக, புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசுத் தலைவரே திறந்து வைப்பது சரியானதாக இருக்கும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இரண்டு அவைகளை மட்டுமல்லாது குடியரசுத் தலைவரையும் உள்ளடக்கியது தான் நாடாளுமன்றம். ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவது வழக்கம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண வருமாறு ஆஸ்திரேலிய பிரதமருக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி!

இதே கருத்தை முன் வைத்து திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மீ உள்ளிட்ட கட்சிகளும்அறிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியும் விழாவைப் புறக்கணிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த கட்சி எடுக்கும் முடிவைத் தி.மு.க.வும் பின்பற்றும் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “கடந்த 1975- ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இணைப்புக் கட்டிடத்தை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியும், 1987- ஆம் ஆண்டு நாடாளுமன்ற நூலகத்தை அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியும் திறந்து வைத்துள்ளனர்” என்றார்.

MUST READ