மாநிலத்தின் பெயரை ”கேரளா” என்பதற்கு பதில் ”கேரளம்” என மாற்றும் தீர்மானத்திற்கு ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.


கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய தீர்மானத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்ற 2024 ஜூன் 24 இல் சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அந்த தீர்மானம் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது.
மாநிலத்தின் பெயரை தாய்மொழி அடையாளத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு சுமார் 20 மாதங்களுக்குப் பிறகு, ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அடுத்த கட்டமாக, அரசியல் மற்றும் அரசியலமைப்பு நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின் பெயர் மாற்றம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரலாற்றை காக்கும் நவீன மாற்றம் – சென்னை எழும்பூர் புதுப்புது பொலிவில்…


