spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஒடிஷா ரயில் விபத்து: அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

ஒடிஷா ரயில் விபத்து: அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

-

- Advertisement -

 

ஒடிஷா ரயில் விபத்து: அவசர உதவி எண்கள் அறிவிப்பு!
Photo: ANI

ஒடிஷா மாநிலத்தில், கோரமண்டல், ஹவுரா விரைவு ரயில்களும், சரக்கு ரயிலும் ஒன்றின் மீது ஒன்று மோதிய விபத்தில் 280 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15- க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

we-r-hiring

தமிழகத்தில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

ரயில் விபத்தில் இதுவரை 900- க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்; அவர்கள் அனைவரும் ஒடிஷா மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள், விவரங்களை வழங்க அவசர கால கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹவுரா- 033- 26382217, காரக்பூர்- 8972073925, 9332392339, பாலசோர்- 8249591559, 7978418322, ஷாலிமர்- 9903370746, சென்னை சென்ட்ரல்- 044- 25330952, 044- 25330953, 044- 25354771 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புக் கொள்ளலாம்.

அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் குறித்து உறவினர்களுக்கு தகவல் அளிக்க எழிலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1070, 044- 28593990, 9445869848 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புக் கொள்ளலாம்.

காட்பாடி அவசர கட்டுப்பாட்டு அறை: 9498651927, ஜோலார்பேட்டை அவசர கட்டுப்பாட்டு அறை: 7708061811, +91 6782262286 என்ற பாலசோர் அவசர கட்டுப்பாட்டு அறை ஆகிய எண்களையும் தொடர்புக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

இதனிடையே, ஒடிஷா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக், மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ரயில் விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

இந்த ரயில் விபத்து தொடர்பாக, உயர்மட்ட விசாரணைக்கு மத்திய ரயில்வேத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

MUST READ