Homeசெய்திகள்இந்தியாஒரே நாடு, ஒரே தேர்தல் குழுவில் யார் யார்?- விரிவான தகவல்!

ஒரே நாடு, ஒரே தேர்தல் குழுவில் யார் யார்?- விரிவான தகவல்!

-

 

22 மாநிலங்களுக்கு ரூபாய் 7,532 கோடி பேரிடர் நிவாரண நிதி!
File Photo

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான எட்டு பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது.

ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்தது ஆதித்யா- எல்1 விண்கலம்!

நாடு முழுவதும் மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து விரிவாக ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் மற்றும் அக்குழுவின் பணிகள் குறித்தும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமித்ஷா, மக்களவையின் காங்கிரஸ் குழுத் தலைவர் ஆத்ர்ரஞ்சன் சவுத்ரி, முன்னாள் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத், 15ஆவது நிதிக்குழு முன்னாள் தலைவர் என்.கே.சிங், முன்னாள் மக்களவைச் செயலாளர் சுபாஷ் கஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் உதவி ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஏதுவாக, அரசியமைப்புச் சட்டத்தில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள், மாநில சட்டப்பேரவைகளில் இருந்து பெறப்பட வேண்டிய ஒப்புதல்கள் குறித்த பரிந்துரைகளை இந்த குழு அரசுக்கு அளிக்கும். மேலும், தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத சூழல் உட்பட எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்கள் என்ன என்பதை இக்குழு கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளைப் பரிந்துரைக்கும்.

இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் மழையால் ரத்து!

ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும் போது எழும், வாக்கு இயந்திரங்கள், பாதுகாப்புப் படையினர், வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட சிக்கல்களுக்கும் தீர்வு காண இக்குழு பரிந்துரைகளை அளிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு உடனடியாகப் பணியைத் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ