
கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி (வயது 79) உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (ஜூலை 18) அதிகாலை 04.25 மணியளவில் உயிரிழந்தார்.

செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்படுகிறார்?
கேரள மாநிலம், புதுப்பள்ளியில் கடந்த 1943- ஆம் ஆண்டு அக்டோபர் 31- ஆம் தேதி பிறந்தவர் உம்மன் சாண்டி. அரசியல் மீதான ஆர்வம் காரணமாக, தன்னை அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். தற்போது வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக உம்மன் சாண்டி இருந்து வந்துள்ளார்.
கடந்த 1991- ஆம் ஆண்டு முதல் 1994- ஆம் ஆண்டு வரை கேரள மாநிலத்தின் நிதித்துறை அமைச்சராகவும், 2004- ஆம் ஆண்டு முதல் 2006- ஆம் ஆண்டு வரை கேரள மாநில முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அதேபோல், 2011- ஆம் ஆண்டு முதல் 2016- ஆம் ஆண்டு வரை இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பணியாற்றியுள்ளார். அப்போது, 2015- ஆம் ஆண்டு முதல் 2016- ஆம் ஆண்டு வரை மாநில நிதித்துறை அமைச்சராகவும் இருந்து பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார்.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி!
முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவுக்கு பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.