Homeசெய்திகள்இந்தியாமக்கள் அச்சப்பட வேண்டாம் - அரவிந்த் கெஜ்ரிவால்

மக்கள் அச்சப்பட வேண்டாம் – அரவிந்த் கெஜ்ரிவால்

-

டெல்லியில் பொது மக்கள் அச்சப்பட வேண்டாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து மாதிரிகளையும் மரபணு சோதனைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி.

மக்கள் அச்சப்பட வேண்டாம் - அரவிந்த் கெஜ்ரிவால்

நாடு முழுவதும் இரண்டாவது நாளாக கொரோனா தினசரி பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் மிக வேகமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினர்.

மக்கள் அச்சப்பட வேண்டாம் - அரவிந்த் கெஜ்ரிவால்

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் போதிய நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுத்து வருவதாக நம்பிக்கை அளித்துள்ளார்.

மேலும், டெல்லியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் அனைவரின் மாதிரிகளையும் மரபனு பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதுமான அளவு ஆக்ஸிஜன் உள்ளதை அரசு உறுதி செய்துள்ளதாகவும் கூரியுள்ளார்.

மக்கள் அச்சப்பட வேண்டாம் - அரவிந்த் கெஜ்ரிவால்

மேலும் மாநில முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தனி சிகிச்சை வார்டுகள் அமைக்க அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கூறுகையில், மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் மூக கவசம் அணிய வேண்டும் என்றும், அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

MUST READ