Homeசெய்திகள்இந்தியாபிரதமர் மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்!

பிரதமர் மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்!

-

 

இடைக்கால பட்ஜெட்- பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு!

பிரதமர் நரேந்திர மோடியின் பரப்புரைக்கு எதிராக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

“நயினார் நாகேந்திரன் பணம் பறிமுதல் விவகாரம்”- அண்ணாமலை விளக்கம்!

தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி அளித்துள்ள புகார் மனுவில், “தேர்தல் பரப்புரையில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுகள், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாக உள்ளது. நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை செய்கிறார். குறிப்பிட்ட இனம் சார்ந்த பரப்புரைகளில் பிரதமர் ஈடுபட்டு வருகிறார்.

முஸ்லிம் லீக் கட்சியை தங்களது தேர்தல் அறிக்கையுடன் ஒப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி பரப்புரையில் ஈடுபடுகிறார்” என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு செல்வப்பெருந்தகை யுகாதி வாழ்த்து!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

MUST READ