
மத்திய பிரதேசம் மாநிலம், போபாலில் இன்று (ஜூன் 27) காலை 11.00 மணிக்கு நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ‘வந்தே பாரத்’ ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

லியோ பட பாடல் விவகாரம் – நடிகர் விஜய்க்கு நோட்டீஸ்
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வலுவான பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும். பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டனர். ஊழல்கள் பிடிபட்டதால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பா.ஜ.க.வை எதிர்க்கின்றன. ஊழல் செய்தவர்களை விட மாட்டோம், அவர்கள் சிறைச் செல்ல நேரிடும். அரசியல் சாசனம் அனைவருக்கும் சமம் என்று கூறும்போது எப்படி இரண்டு வகையான சட்டங்கள் இருக்க முடியும்?
பவண் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் ரீமேக் ஆகும் வினோதய சித்தம்… வெளியான மாஸ் போஸ்டர்!
பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றமும் கூறியுள்ளது. பொது சிவில் சட்டத்தில் எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியல் செய்கின்றனர். தி.மு.க.வுக்கு வாக்களித்தால் கருணாநிதியின் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் மட்டுமே பலனடைவார்கள். காங்கிரஸுக்கு வாக்களித்தால் காந்தி குடும்பம் மட்டுமே பலனடையும். எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல் நாட்டுக்கு உகந்ததல்ல. நாட்டு நலனுக்காகவும், சந்ததிகள் முன்னேற்றத்திற்காகவும் மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


