இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது 10-வது சுதந்திர தின உரையை நிகழ்த்தியுள்ள சூழலில், 2014- ஆம் ஆண்டு முதல் அவர் எத்தனை நிமிடங்கள் பேசியுள்ளார் என்பதை விரிவாகப் பார்ப்போம்!
பாமகவை ஒரு கட்சியாகவே பொருட்படுத்துவதில்லை- எடப்பாடி பழனிசாமி
கடந்த 2014- ஆம் ஆண்டு பிரதமராக முதன்முறையாகப் பதவியேற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தனது முதல் சுதந்திர தின விழா உரையை 65 நிமிடங்கள் நிகழ்த்தினார். அதன் பின்னர், கடந்த 2015- ஆம் ஆண்டு 86 நிமிடங்கள் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
கடந்த 1947- ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 72 நிமிடங்கள் பேசியதே, சுதந்திர தினத்தன்று பிரதமர் நிகழ்த்திய மிக நீண்ட உரையாக இருந்தது. இதனை பிரதமர் நரேந்திர மோடி முறியடித்தார்.
மணிப்பூரை மறந்து தமிழ்நாட்டையும், திமுகவையும் பாஜக குறிவைப்பது ஏன்?- எ.வ.வேலு
2016- ஆம் ஆண்டு 96 நிமிடங்கள் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 2017- ஆம் ஆண்டு 56 நிமிடங்களே பேசினார். இதுவே பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர தினத்தன்று மிகக் குறைந்த நிமிடங்கள் நிகழ்த்திய உரை ஆகும்.
கடந்த 2018- ஆம் ஆண்டில் சுதந்திர தினத்தன்று 80 நிமிடங்கள் உரையாற்றிய பிரதமர், 2019- ஆம் ஆண்டு 92 நிமிடங்கள் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். கடந்த 2020- ஆம் ஆண்டில் 92 நிமிடங்களும், 2021- ஆம் ஆண்டில் 88 நிமிடங்களும், 2022- ஆம் ஆண்டில் 82 நிமிடங்களும் என உரையாற்றினார்.
இதில் கடந்த 2022- ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி, டெலி பிராம்டர் இல்லாமல் உரையாற்றினார். தனது 10வது சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி 89 நிமிடங்கள் உரையாற்றியுள்ளார்.
“நீட் தேர்வை வைத்து அரசியல் செய்வதா?”- அண்ணாமலை
இதுவரையில் 10 ஆண்டுகள் பிரதமர் பதவியில் இருந்த மன்மோகன் சிங், அதிகபட்சமாக 50 நிமிடங்கள் மட்டுமே சுதந்திர தின விழாவின் போது உரையாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.