ராஜஸ்தான் மாநிலத்தில் ஒயர் திருடியதாக தலித் சிறுவனை நிர்வாணப்படுத்தி நடனமாட செய்து, வீடியோ எடுத்த 6 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் நள்ளிரவில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் ஒயர்களை திருடியதாக கூறி 12 வயது பட்டியலின சிறுவனை பிடித்து தாக்கியுள்ளனர். மேலும் அந்த சிறுவனை நிர்வாணப்படுத்தி நடனமாட சொல்லி காலணிகளால் தாக்கியுள்ளனர். மேலும் இதனை வீடியோ எடுத்து இணையதளங்களிலும் வெளியிட்டுள்ளார்.
இது சமுக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட கோட்டா காவல்துறையினர் சிறுவனின் தந்தையிடம் புகார் அளிக்கும்படி வலியுறுத்தினர். இதனை அடுத்து, அவரது புகாரின் அடிப்படையில் தலித் சிறுவனை தாக்கி துன்புறுத்திய ஷிட்டிஜ் குஜ்ஜர், யதாதி உபாத்யாய், ஆஷிஷ் உபாத்யாய், கௌரவ் சைனி, சந்தீப் சிங், அமர் சிங் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.