பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.


243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு கடந்த நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பீகார் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 67.13% வாக்குகள் பதிவாகியது. தேர்தலில் பயன்படுத்தப்பட்டு வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 38 மாவட்டங்களில் உள்ள 46 வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன.
இந்த தேர்தலில் ஆளும் நிதிஷ்குமார் தலைமையிலான ஜக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணியி n4nnj மற்றும் பாஜக தலா 101 இடங்களில் போட்டியிட்டன. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி – 29, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா ஆகிய கட்சிகள் தலா 6 ஆடங்களில் போட்டியிட்டன. இந்தியா கூட்டணி தரப்பில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ரிய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61, இந்திய கம்யூ. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் -20, விஜபி – 15, சிபிஐ -9, சிபிஎம் – 4 தொகுதிகளில் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தனித்து களம் கண்டது.

இந்த நிலையில், பீகார் சட்டமன்றத் தேர்தலில் பதிவாகிய வாக்குகள் எண்ணும் பணி, 46 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதை தொடர்ந்து தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே ஜே.டி.யு – பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி என்டிஏ கூட்டணி 150 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 75 இடங்களுக்கு மேலாக முன்னிலை வகித்து வருகிறது. ஜே.டி.யு, பாஜக தலா 70 தொகுதிகளுக்கும் மேலாக முன்னிலை வகிக்கின்றன. அதேவேளையில் ஆர்.ஜே.டி 40 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. சிராக் பாஸ்வான் கட்சி 15 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர்.
பீகாரில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 122 இடங்கள் தேவை. என்டிஏ கூட்டணி தற்போதே 150 இடங்களுக்கும் மேலாக முன்னிலை பெற்றுள்ளதால் பிகாரில் என்டிஏ கூட்டணி தொடர்வது உறுதியாகி உள்ளது. அதேவேளையில் ஜன் சுராஜ் கட்சி 2 இடங்களிலும், சுயேட்சைகள் 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர்.


