spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மர்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மர்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

-

- Advertisement -

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்க உள்ள கெயர் ஸ்டார்மர்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 650 தொகுதிகளில் 411 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தொழிலாளர் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பிரிட்டனின் பிரதமராக உள்ள ரிஷி சுனக்கின் கட்சியான கன்சர்வேட்டிவ் எனும் பழமைவாத கட்சி 119 இடங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.

we-r-hiring

பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மர்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துபிரிட்டன் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள கெய்ர் ஸ்டார்மர்-க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்த ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பரஸ்பர வளர்ச்சி மற்றும் சலிப்பை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் இந்தியா இங்கிலாந்து இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை எதிர் நோக்குவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மர்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துபிரிட்டன் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கெய்ர் ஸ்டார்மர் இந்தியாவுடன் அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் , இந்தியாவுடன் நல்லுறவு மேம்படுத்தப்படும் எனவும் கூறியிருந்தது இந்நேரத்தில் குறிப்பிடத்தக்கது.

MUST READ