
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி சி58 ராக்கெட். எக்ஸ்போசாட் உள்பட 10 செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் யோகி பாபு!
போலரிமீட்டர் செயற்கைக்கோள் மூலம் கருந்துளை, விண்மீன் மண்டலம், நெபுலா குறித்து ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்ரே கதிர் மூலம் வானியல் இயக்கங்களை ஆய்வுச் செய்ய எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் அனுப்பப்பட்டது. திருவனந்தபுரம் கல்லூரி மாணவிகள் தயாரித்த வெசாட் செயற்கைக்கோளும் ஏவப்பட்டது.
சூரியன், சந்திரன், செவ்வாய் தாண்டிய பிரபஞ்சம் பற்றிய ஆராய்ச்சிக்காக செயற்கைக்கோள் அனுப்பப்பட்டது. போலரி மீட்டர் செயற்கைக்கோள் கிழக்கு சுற்றுவட்டப் பாதையில் 650 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்படுகிறது. பிஎஸ்4 என்ற ராக்கெட் பாகம் Poem3 செயற்கைக்கோள்களை 350 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்படுகிறது.
‘அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து’…. நடிகர் கமல்ஹாசன்!
இஸ்ரோ விஞ்ஞானிகள் ராக்கெட்டின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.