Homeசெய்திகள்இந்தியாராகுல் காந்திக்கு அன்புக் கட்டளையிட்ட லாலு பிரசாத் யாதவ்!

ராகுல் காந்திக்கு அன்புக் கட்டளையிட்ட லாலு பிரசாத் யாதவ்!

-

- Advertisement -

 

ராகுல் காந்திக்கு அன்புக் கட்டளையிட்ட லாலு பிரசாத் யாதவ்
Photo: Rahul Gandhi

பீகாரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற ராகுல் காந்தியிடம் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளுமாறு முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியிருக்கிறார்.

“செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை”!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அண்மையில் தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ராகுல் காந்தி திருமணம் செய்துக் கொள்ளாதது குறித்து பலரும், வருத்தங்களும், விமர்சனங்களும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் மூத்த தலைவரும், பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவும் திருமணம் தொடர்பாக, ராகுல் காந்தியிடம் அன்புக் கட்டளையிட்டார்.

எழுத்தாளர்கள் உதயசங்கர், ராம் தங்கம் ஆகியோருக்கு டிடிவி தினகரன் பாராட்டு!

பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி அங்கு சென்றிருந்தார். அப்போது அவர், லாலு பிரசாத் யாதவைச் சந்தித்துப் பேசிய போது, ஏன் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்று ராகுலிடம் பாசத்துடன் லாலு கேட்டுள்ளார். அத்துடன், நான் கூறிய அறிவுரையை நீங்கள் முன்பே கேட்கவில்லை என்று கடிந்துக் கொண்டதுடன் இன்னும் தாமதமாகவில்லை, விரைவில் திருமணம் செய்துக் கொள்ளுமாறு ராகுலிடம் லாலு கூறியுள்ளார்.

MUST READ