Homeசெய்திகள்தமிழ்நாடு"செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை"!

“செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை”!

-

- Advertisement -

 

Senthil balaji

சட்டவிரோதப் பணபரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அதைத் தொடர்ந்து, சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.

எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள ராகுல்காந்தி அழைப்பு

தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவரை எட்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் கடந்த ஜூன் 16- ஆம் தேதி அனுமதி அளித்திருந்தது. மேலும், ஜூன் 28- ஆம் தேதி மாலை 03.30 மணிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை காணொளி மூலம் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டிருந்தது. எனினும், அமைச்சருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாலும், மருத்துவர்கள் அறிவுறுத்தல் காரணமாகவும், செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்கவில்லை என்று, அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

திருப்பதி மலைப்பாதையில் சிறுவனை கவ்வி சென்ற சிறுத்தை

இந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஜூன் 23) ஆஜர்படுத்தவில்லை. மேலும், அமைச்சரை காவலில் எடுத்து விசாரிக்காததால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

எனினும், வரும் ஜூன் 28- ஆம் தேதி நீதிமன்றக் காவல் முடியும் நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் காணொளி மூலம் ஆஜர்படுத்தலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ