
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை மாற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 23- ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில தேர்தலை வரும் நவம்பர் 25- ஆம் தேதிக்கு மாற்றம் செய்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளார்.
முகூர்த்த நாளான நவம்பர் 23- ஆம் தேதி திருமண நிகழ்வுகள் அதிகம் நடைபெறவிருப்பதால், அன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்றால், வாக்கு சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளனர். அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
நவம்பர் 25- ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3- ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


