Homeசெய்திகள்இந்தியாபஞ்சாப் விவசாய சங்க தலைவருடன் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பேச்சுவார்த்தை

பஞ்சாப் விவசாய சங்க தலைவருடன் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பேச்சுவார்த்தை

-

- Advertisement -

பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உண்ணாவிரதத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் பஞ்சாப் விவசாய சங்க தலைவருடன் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பஞ்சாப் அரசு கூறியதை ஏற்று உச்சநீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.பஞ்சாப் விவசாய சங்க தலைவருடன் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பேச்சுவார்த்தை

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற பஞ்சாப் விவசாயிகள் ஹரியானா எல்லைப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் . பஞ்சாப்-ஹரியானா எல்லை பகுதியான கனவுரியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கடந்த நவம்பர் 26ம் தேதி முதல் 70 வயதான பஞ்சாப் விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இதனால் அவரின் உடல்நிலை மோசம் அடைந்துள்ள நிலையில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி மருத்துவமனைக்கு மாற்ற பஞ்சாப் அரசுக்கு முன்பு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பஞ்சாப் அரசு நிறைவேற்றவில்லை எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கின் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்ய காந்த்,  என்.கே. சிங் அமர்வில் நடைபெற்று வருகிறது.

இன்று இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பஞ்சாப் அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில்,  இன்று மாலை 3 மணிக்கு அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவை விவசாய சங்கங்கள் சந்திக்க உள்ளதாகவும், சுமூகமான முடிவு எட்டப்படும் என நம்புவதாகவும், எனவே வழக்கை ஒத்திவைக்குமாறு கோரிக்கை வைத்தார்.

இதனையேற்று வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு நீதுபதிகள  ஒத்தி வைத்தனர். மேலும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்க தலைவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்பது போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் புரிந்து கொள்ளப்பட்டதாக கூறிய நீதிபதிகள் மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி போராட்டத்தை தொடரலாம் எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

‘தமிழக ஆளுநர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்’: திமுகவுடன் கைகோர்த்த விஜய்..!

MUST READ