உத்தரபிரதேச மாநிலத்தில் ராகுல்காந்தி தைத்த காலணி பல லட்சத்திற்கும் விலை போகும் நிலையில், அதனை தொழிலாளி விற்பனை செய்ய மறுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது-
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 26ஆம் தேதி உத்தரபிதேச மாநிலம் சுல்தான்பூருக்கு சென்றிருந்தபோது, அங்கு சாலையோரம் செருப்பு தைத்துக் கொண்டிருந்த ராம்சேட் என்ற தொழிலாளியிடம் பேசினார். அப்போது ராம்சேட்டின் குறைகளை கேட்டறிந்த ராகுல்காந்தி அவருக்கு உதவிடும் விதமாக புதிய தையல் மெஷின் ஒன்றை பரிசாக வழங்கினார். மேலும் அவரிடம் செருப்பு தைக்கவும் கற்றுக்கொண்டார்.


இந்த நிலையில், ராகுல்காந்தி தைத்த காலணியை வாங்குவதற்கு பலரும் ராம் சேட்டை அணுகிவருகின்றனர். அதிக விலை கொடுத்து செருப்பை வாங்க தயாராக உள்ளபோதும் அதை விற்க ராம் சேட் மறுத்துவிட்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராம்சேட், ராகுல்காந்தி வருகைக்கு பின்னர் என்னுடை ய உலகம் முற்றிலும் மாறிவிட்டதாக கூறினார். பிரபல நபர் ஒருவர் தனக்கு போன் செய்து ராகுல்காந்தி தைத்து கொடுத்த செருப்பை 10 லட்சத்திற்கு வழங்குமாறு கேட்டதாகவும், ஆனால் அந்த செருப்பு தனக்கு கிடைத்த அதிர்ஷடம் என்றும் அதனை யாருக்கும் விற்கவோ , தரவோ மாட்டேன் என கூறிவிட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், ராகுல் காந்தி தைத்த செருப்புகள் தனக்கு விலை மதிப்பற்றவை என்றும், ராகுல் காந்தியால் தைக்கப்பட்ட செருப்புகளை பிரேம் செய்து கடையில் வைப்போம் என்றும் ராம்சேட் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தா ர்.


