spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபிரபல மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்!

பிரபல மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்!

-

- Advertisement -

 

பிரபல மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்!

we-r-hiring

பிரபல சட்ட நிபுணரும், மூத்த வழக்கறிஞருமான ஃபாலி நாரிமன் (வயது 95) காலமானார்.

நடிகை திரிஷா குறித்து அதிமுக முன்னால் நிர்வாகியின் சர்ச்சை பேச்சு…… விஷால் கண்டனம்!

உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ஃபாலி நாரிமன் பல்வேறு முக்கிய வழக்குகளில் வாதாடியவர். நாடாளுமன்ற நியமன உறுப்பினராக இருந்த ஃபாலி நாரிமன் பத்ம விருதுகளைப் பெற்றுள்ளார். ஃபாலி நாரிமனுக்கு 1991- ல் பத்ம பூஷன் விருது, 2007- ல் பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது. நாட்டின் தலைசிறந்த அரசியல் சாசன வழக்கறிஞர்களில் ஒருவராக அறியப்பட்டவர் ஃபாலி நாரிமன். காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு சார்பில் ஆஜராகி பல வருடங்களாக வாதாடியுள்ளார் ஃபாலி நாரிமன்.

சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் வழக்கில் நாரிமனின் வாதங்கள் முக்கியத்துவம் பெற்றன. ஃபாலி நாரிமனின் மகன் ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்திருக்கிறார்.

அறிவித்த தேதிக்கு முன்னதாகவே ரிலீஸாகும் பிரித்விராஜின் ‘ஆடு ஜீவிதம்’….. உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஃபாலி நாரிமனின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நீதிபதிகள், முதலமைச்சர்கள் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 70 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய ஃபாலி நாரிமனின் அனுபவம் வரலாற்று சிறப்புமிக்கது. நீதித்துறையில் ஃபாலி நாரிமனின் பங்களிப்புகள் எப்போதும் நினைவுக்கூறப்படும். பல்வேறு முக்கிய தீர்ப்புகளை அவர் முக்கிய கருவியாக இருந்துள்ளார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

MUST READ