டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா நேரில் சந்தித்துப் பேசினார். நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த இந்த சந்திப்பில், பிரதமருக்கு சந்தன மாலையையும், சந்தன மரத்தினால் ஆன சிற்பத்தையும் முதலமைச்சர் சித்தராமையா பரிசளித்தார்.
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
தங்கள் மாநிலத்தில் திட்டங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் எனவும், கர்நாடகா மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கர்நாடகா மாநில முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் சித்தராமையா முதன்முறையாக சந்திப்பது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பில் ‘மாமன்னன்’ படத்தைச் சுட்டிக்காட்டிய நீதிபதி!
அதைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்தித்து, மாநில அரசின் சார்பில் கோரிக்கைகளை கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா முன் வைத்தார்.