Homeசெய்திகள்இந்தியாகர்நாடகா முதல்வராக பதவியேற்றார் சித்தராமையா

கர்நாடகா முதல்வராக பதவியேற்றார் சித்தராமையா

-

- Advertisement -

கர்நாடகா முதல்வராக பதவியேற்றார் சித்தராமையா

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் ஆகியோர் பதவியேற்றனர்.

sidd

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பெங்களூருவில் உள்ள கண்டீவரா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக சித்தராமையா பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலளர் பிரியங்கா, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சுர்ஜேவாலா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, மெகபூபா முபதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகெல், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கர்நாடக முதல்வராக சித்தராமையாவுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். சித்தராமையா, டி.கே.சிவக்குமாருடன் புதிய அமைச்சர்கள் 8 பேர் பதவியேற்றுக்கொண்டனர். விழா மேடையில் உள்ள தலைவர்களும், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

MUST READ